கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் மகன்... பதறியடித்துக் கொண்டு ஸ்பார்ட்டிற்கு வந்த தந்தை... வைரல் வீடியோ!
அப்போது சிக்கனலை தாண்டி வேகமாக வந்த கார் ஒன்று, கோவிந்தா மகன் கார் மீது மோதியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அஹூஜா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நண்பரை காண சென்ற யஷ்வர்தன், இரவு 8.30 மணி அளவில் மும்பை ஜுஹூ பகுதியில் காரில் வந்துள்ளார். அப்போது சிக்கனலை தாண்டி வேகமாக வந்த கார் ஒன்று, கோவிந்தா மகன் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநருடன் சென்ற யஷ்வர்தனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காரில் சில கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!
அமிதாப் பச்சனின் பிரதிக்ஷா பங்களா உள்ள இடத்திற்கு அருகே விபத்து நடந்துள்ளது. அப்போது யஷ்வர்தன் கார் மீது மோதியது, பாலிவுட்டின் பிரபல இயக்குநரான பி.ஆர். சோப்ராவின் பேரன் ரிஷப் சோப்ராவின் கார் என்பது தெரியவந்துள்ளது. ரிஷப் சோப்ரா சிக்கனலை மதிக்காமல் வேகமாக வந்ததால் தான் விபத்து நடந்துள்ளது. இதையடுத்து மகன் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேள்விப்பட்ட கோவிந்தா சம்பவ இடத்திற்கு பதறியடிதுக் கொண்டு ஓடிவந்தார். மகனை நலம் விசாரித்த கோவிந்தா, அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!
இதையடுத்து விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டறிந்த கோவிந்தா, அவை அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதில் சுற்றியிருப்பவர்கள் மற்றொரு கார் சிக்னலை மீறி வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், கோவிந்தா வீடியோ பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
அதற்கு விளக்கம் அளித்துள்ள கோவிந்தா, யஷ்வர்தன் எனக்கு போன் செய்த மறுகணமே நான் அங்கு சென்றுவிட்டேன். அங்கிருந்தவர்கள் இன்னொரு கார் சிக்கனலை மதிக்காமல் வேகமாக வந்தது தான் காரணம் என கூறினர். அதை தான் நான் போனில் பதிவு செய்துகொண்டேன். நீங்கள் செய்தது சரியாகவே இருந்தாலும் அதற்கு ஆதாரம் தேவைப்படும். அதனால் தான் நேரில் பார்த்தவர்கள் கூறியதை நான் கேமராவில் பதிவு செய்து கொண்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.