தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவசர நாயகன் கார்த்திக். இவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவின் இளம் நடிகராக நடித்து வருகிறார். இவர்கள் அனைவரும் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். கவுதம் கார்த்திக் தினமும் தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலமாக சைக்கிளிங் செல்வது வழக்கம். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்காக தினமும் காலையில் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

இன்று அதிகாலையும் அதேபோல் தனது ஸ்மார்ட் சைக்கிளை எடுத்துக் கொண்டு மெரினா சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். ராதாகிருஷ்ணன் - டி.டி.கே. சாலை சந்திப்பு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த கவுதம் கார்த்திக்கை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அப்போது அவர்களிடம் தப்பிக்க முயன்ற கார்த்தியை கீழே தள்ளிவிட்டு, அவரிடம் இருந்த விலையுயர்ந்த சாம்சங் ரக செல்போனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருடர்கள் கீழே தள்ளியதால் லேசான காயமடைந்த கவுதம் கார்த்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். உடற்பயிற்சிக்காக வெளியில் சென்ற நடிகரை வழிமறித்து கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.