- Home
- Cinema
- தொலைக்காட்சி
- லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
Ramya Joo Viyana Salary in Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ல் இந்த வாரத்தில் எதிர்பார்க்காத விதமாக ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் அடுத்தடுத்த நாட்கள்ல் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Bigg Boss Tamil Remuneration
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 9. ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு எலிமினேஷன் இருந்த நிலையில் தற்போது 60 நாட்கள் கடந்த நிலையில் அதாவது பத்தாவது வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருக்கிறது. இதில் சனிக்கிழமை அன்று ரம்யா ஜோ வீட்டை விட்டு வெளியேறினார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வியானா வெளியேறியுள்ளார். இவர்கள் இருவரும் இந்த வீட்டில் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர். அது எவ்வளவு என்று பார்க்கலாம்.
Ramya Jo Viyana Salary in Bigg Boss Tamil Season 9
பிக் பாஸ் வீட்டில் கனி திருவிற்கு மட்டும் வாரத்திற்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் அதிகபட்சமாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. மற்ற போட்டியாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் புதிய வரவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் ரம்யா ஜோ, வியானா, சுபிக்ஷா, எஃப்ஜே, கம்ருதீன், பிரஜன், சாண்ட்ரா ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படுகிறது.
ரம்யா ஜோவின் சம்பளம்:
ரம்யா ஜோ சரியாக விளையாடாத காரணத்தினாலும் அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் மிகவும் மன வலியுடனும் இருந்து வந்தார். இதன் பிறகு சனிக்கிழமை அன்று ரம்யாதோ வீட்டில் விட்டு வெளியேறினார். அவருக்கு பிக் பாஸ் ஷோ வில் இருந்து ஒரு வாரத்திற்கு 50,000 வரை சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் 10 வாரம் கடந்த நிலையில் அதாவது 70 நாட்களாகி உள்ளது. இதன் அடிப்படையில் ரம்யா ஜோ ரூ.6 லட்சம் வரை சம்பளம் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி காபி கொடுத்து அவரை வழி அனுப்பி வைத்தார்.
வியானா:
பிக் பாஸ் வீட்டில் சரியான ஈடுபாட்டில் இல்லாத வியானா தனிமையில் உள்ளே இருந்து வந்தார். வாக்குகளை குறைவாக பெற்று இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் வியானா ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் ஆக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். ஆரம்பத்தில் மிகுந்த ஆர்வமும் கவனத்திடனும் விளையாடிய வியானா தற்போது எழுமினேட் ஆகியுள்ளார்.
வியானாவின் சம்பளம்:
இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரத்தில் கம்ரூதீன் மற்றும் விஜே பார்வதி இருவரும் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரத்தில் ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வியானாவின் சம்பளம்:
பிக் பாஸில் வியானாவிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் என்று கூறப்படும் நிலையில் வியானா கிட்டத்தட்ட 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு ரூ.10 லட்சம் என்றும், இதில் அவருக்கு பிடித்தம் போக மீதி தொகை கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் லட்சக்கணக்கிலேயே சம்பளம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.