'திருச்சிற்றம்பலம்' படத்தை மகன்களுடன் சேர்ந்து ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ... பார்த்த நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை மகன்களுடன் ரோகிணி திரையரங்கம் வந்து, ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டு ரசித்தார் நடிகர் தனுஷ்.
 

actor dhanush watching thiruchitrambalam movie with sons

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிரூத் இசைமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கர்ணன் படத்திற்கு பின் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இப்போது தான் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.

actor dhanush watching thiruchitrambalam movie with sons

மேலும் செய்திகள்: 54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை!
 

இதனையொட்டி காலை முதலே தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் தாரைதப்பட்டையோடு, ஆட்டம் பாட்டத்தோடு பட்டாசு வெடித்து திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காலை முதலே  பட்டாசு வெடித்து மேலாதளத்துடன், ஆட்டம் பாட்டத்தோடு திரைப்படத்தை வரவேற்றனர். ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியாக காலை 8 மணிக்கு 'திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. இதனை தன் மகன்களுடன் வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் நடிகர் தனுஷ்.

actor dhanush watching thiruchitrambalam movie with sons

மேலும் செய்திகள்: இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!
 

மேலும், படக்குழுவினர் அனிருத், இயக்குனர் மித்ரன் ஜவகர், ராசி கண்ணா ஆகியோரோடு தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் பார்த்து ரசித்தனர். திருச்சிற்றம்பலம் படத்தில் உணவு டெலிவரி பாயாக நடிகர் தனுஷ் நடித்துள்ள நிலையில், நேற்று நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர்.

actor dhanush watching thiruchitrambalam movie with sons

மேலும் செய்திகள்: 5 நாளில் வசூலை அள்ளிய 'விருமன்'..! சூர்யா - கார்த்திக்கு வைரகாப்பை பரிசாக கொடுத்த பிரபலம்.!
 

இந்தநிலையில், படத்தில் உணவு டெலிவரி பாயாக தனுஷ் நடித்துள்ளதை வரவேற்கும் விதமாக ஸ்விக்கி சீருடையோடு சில உணவு டெலிவரி பாய்கள் திரைப்படத்தை பார்க்க வந்திருந்தனர். 7 வருடங்களுக்கு பிறகு அனிருத் கூட்டணியிலும் கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு  தனுஷின் திரைப்படம் தியேட்டரில் வெளியவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios