தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 'கர்ணன்' படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கிறேன்... பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!
 

“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில், கிராமிய கலைஞர் மாரியம்மாள் பாடிய 'கண்டா வரச்சொல்லுடா' பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், மார்ச் 2 ஆம் தேதி, வெளியான பண்டாரத்தி புராணம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்:முன்னழகு... பின்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..! ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆவது ராசா!
 

இதை தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை ட்விட் செய்துள்ளார் ...  அதாவது இந்த படத்தின் டீசர், மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தனுஷ் இந்த தகவலை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே , ரசிகர்கள் வைரலாக்கி விட்டனர்.

தனுஷின் ட்விட் இதோ...