- Home
- Cinema
- சும்மா பேசாதீங்க; நாங்க நல்லவங்க; எங்க குடும்பம் நல்ல குடும்பம்: அடிச்சுவிட்ட மாணிக்கம்; ஷாக்கான சரவணன்!
சும்மா பேசாதீங்க; நாங்க நல்லவங்க; எங்க குடும்பம் நல்ல குடும்பம்: அடிச்சுவிட்ட மாணிக்கம்; ஷாக்கான சரவணன்!
Pandian Stores 2 Serial Today 661 Episode Highlights : தங்கமயில் தொடர்பான பிரச்சனையில் ஆளாளுக்கு கேள்வி எழுப்பிய நிலையில் சும்மா எல்லாம் பேசாதீங்க, எங்க குடும்பம் நல்ல குடும்பம் என்று மாணிக்கம் கூற அதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில், இப்போது குடும்ப சண்டை தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. எப்போது உண்மை, நேர்மை, நியாயம் என்று வாழ்ந்து வரும் குடும்பத்தில் பொய் சொல்லி காலத்தை ஓட்டினால் என்ன நடக்கும் என்பது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆம், தங்கமயில் மற்றும் சரவணன் இடையிலான பிரச்சனைக்கு இப்போது குடும்பத்தோடு தீர்வு காணப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்ப சண்டை
இந்த சூழலில் தான் இன்றைய எபிசோடில் எங்களது குடும்பம் ரொம்பவே நல்ல குடும்பம். இதுவரையில் எந்த தப்பும் செய்ததில்லை. நாங்கள் பாவம் அப்படி இப்படி என்று மாணிக்கம் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், உங்களது குடும்ப லட்சனம் என்ன என்று எனக்கு தானே தெரியும். நீங்கள் செய்த எல்லா பிராடு தனத்திற்கும் நான் உடந்தையாக இருந்திருக்கிறேன். அதனால் நான் செய்தது தான் தவறு என சரவணன் கடைசியில் காசு பணம் எடுத்ததை தனது அப்பாவிடம் கூறிவிட்டார். இதற்காக நாம் மாமாவைத்தான் சந்தேகப்பட்டோம். ஆனால், காசு மாமா எடுக்கவில்லை அப்பா. இந்த ஆளு தான் எடுத்தாரு என்றார்.
பணம் திருடிய உண்மையை சொன்ன சரவணன்
இதைத் தொடர்ந்து மாணிக்கம் என்ன நடந்தது என்ற உண்மையை சொன்னார். அதாவது மயிலுக்கு ரொம்ப நாளாவே திருமணம் நடக்கவில்லை. அதனால், ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். அவருக்கு தோஷம் இருக்கிறது என்று ஆரம்பித்தார்கள். அதற்குள் பாண்டியன் குறுக்கிட்டு தன்னிடம் உள்ள நிறை குறைகளை தெளிவாக பேசினார். உண்மையை சொல்லியிருந்தால் பிடித்திருந்தால் திருமணம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிட்டிருப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்
அப்படியே தோஷமாக இருந்தாலும் அதற்குரிய பரிகாரங்களை செய்த பிறகு திருமணம் செய்திருப்போம். 12ஆம் வகுப்பு வரை படிச்சது, 2 வயது பெரியவள் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால், நீங்கள் உண்மையை மறைத்து அடுக்கடுககாக பொய்களை சொன்னது தான் எங்களுக்கு பிரச்சனை என்று கூறினார். இறுதியாக அவரது முடிவு என்ன என்பது தான் இப்போது எல்லோரது கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் நாளைய எபிசோடில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.