கர்ப்பமாக இருக்கிறேன்... பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!
First Published Mar 4, 2021, 12:58 PM IST
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது நண்பரும், காதலருமான, ஷிலாதித்யா என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தான் கர்ப்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய 'சலக் சலக்' என்ற பாடல், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார்.

குறிப்பாக தமிழில் இவர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் பாடிய முன்பே வா என் அன்பே வா... பாடல் 'விருமாண்டி' படத்தில் இடம்பெற்ற 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல' பாடல், '7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து பார்த்தால்'... போன்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இடம்பிடித்துள்ளது.

மேலும் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும், அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது இவரது மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரேயா கோஷலுக்கு இவரது ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.