நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  'கென்னடி கிளப்'. பெண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் இன்று 5 மணிக்கு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். 

இயக்குனர் சுசீந்திரன் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம், 'கென்னடி கிளப்' .  இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், இயக்குனர் பாரதிராஜா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர்.  இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 'கென்னடி கிளப்' படத்தின் டீசரை ப்ரொமோட் செய்யவுள்ளார். 

ஏற்கனவே, பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, 'கனா' போன்ற படங்களுக்கு ராசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.