நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் , 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் , 'ஜகமே தந்திரம்', மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்த வருடம் இவ்விரு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பட வேலைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ள. 

இது ஒரு புறம் இருக்க, தற்போது நடிகர் தனுஷ் நடித்து பாதியில் நின்று போன 'திருடன் போலீஸ்' படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்த படத்தை அறிமுக இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான அரவிந்த் கிருஷ்ணா இயக்கினார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். 

இப்படத்தில் கண்ணாடிகள் அணிந்தபடி தனுஷ் புதிய லுக்கில் இருக்கும் போஸ்டர் இதோ...