நடிகர் தனுஷ் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், கோலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய தரத்தை உயர்திக்கொண்டே போகிறார். 

மேலும் நடிப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்படம் இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். 

அடுத்ததாக இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2 ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அதேபோல் நடிகை வரலட்சுமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு 'மாரி 2 ' படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனால் தனுஷ் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என ட்விட்டர் பக்கத்தில் நலம் விசாரித்ததோடு, தனுஷ் எப்படி இருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறும்  வேண்டுகோள் வைத்தனர்.

இதனால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தற்போது ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார் தனுஷ். இது குறித்து அவர் கூறுகையில், 'என் அன்பான ரசிகர்களுக்கு, எனக்கு ஏற்பட்டது பெரிய காயம் அல்ல, நான் நலமாக உள்ளேன், உங்கள் அன்பு மற்றும் பிராத்தனைக்கு நன்றி எனது பலத்தின் தூண்களாகிய உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்'. 

தனுஷ் இப்படி கூறியுள்ளதால், பதட்டத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.