Dhanush 50 Movie : பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 51வது படத்தை பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு தாராவி என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இப்பொழுது நல்ல பல படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பும் இப்பொது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த திரைப்பட பணிகளை முடித்த நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது பட பணிகளை தொடங்கினார். பா. பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்பட படப்பிடிப்பு பணிகளை தனுஷ் அவர்கள் முடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவருடைய பெயர் என்ன என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த திரைப்படத்தின் பெயர் "ராயன்" என்றும், அந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் "காத்தவராயன்" என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. D50 பணிகளை முடித்துள்ள தனுஷ், தனது 51வது படத்திற்கான பணிகளை ஆந்திர பிரதேசத்தில் தற்போது மேற்கொண்டு வருகிறார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2026 ஆம் ஆண்டையும் தாண்டி அவருடைய படங்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது.
