உயிரை பறிக்கும் ஆபத்து நெருங்கி வரும் நிலையில், மக்களின் அவல நிலையை பயன்படுத்தி பணம் பார்க்க நினைக்கும் கடைக்காரர்கள் முகத்திரையை கிழித்து, மனம் பொறுக்க முடியாத ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார், பிரபல காமெடி நடிகர் பால சரவணன் .

உலக நாடுகளில் உள்ள அணைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸில் இருந்து விடுபட வேண்டும் எனில், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும் என்றும் வெளியில் செல்லும் போது ஹேன்ட் சானிடைசர் பயம் படுத்திய பின்பே முகம், கண்கள் போன்றவை தொட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது சென்னையில் உள்ள கடைகளில் கிருமி நாசினி, மற்றும் ஹாண்ட் வாஷிங் விலை எக்க சக்கமாய் எகிறி போய் உள்ளது.  இப்படி விலையேற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து தான் நடிகர், பால சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கொரோனாவை விட மனிதன் கொடூரமானவன் என பதிவிட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,  மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேன்ட் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு போனேன். அங்கு 60 ரூபாய்க்கு விற்க வேண்டிய சானிடைசரை 135 ரூபாய் என்று சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு 'நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்' என கடையில் இருந்தவர் பாவமாக கூறினார்.

பின் ஒரு டீ கடைக்கு சென்ற போது அந்த அக்கா டீ போடுவதற்கு முன், கையில் ஒரு துணி சானிடைசர் பயன்படுத்திய பின்பே, டீ போட துவங்கினார். அவரோ... 60 ரூபாய் விற்க வேண்டியதை 115 என்று சொல்கிறார்கள் என கூறினார். 

இதைத்தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு கடைப்பில் இப்படி அதிக விலைக்கு விற்கப்படுவதை பற்றி கூறினர். இதனால் அந்த டீ போடும் அக்கா வீட்டுக்கு வாங்காமல், கடைக்கு மட்டுமே வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆதங்கமாக பால சரவணன், அவசர காலங்களில் பெரிய நிறுவனங்கள் இவற்றை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அதன் உரிய தொகைக்கு கூட விற்கலாம், ஆனால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகரித்து விற்பது ஏற்று கொள்ள முடியாதது என்றும் இது கேவலமான செயல் என பொங்கி எழுந்துள்ளார். 

இதுகுறித்து பால சரவணன் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...