'ஹரஹர மஹாதேவகி' அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை இரண்டாவதாக இயக்கினர்.டைட்டிலில் ஆரம்பித்து டிரெய்லர், வசனம் என அனைத்துமே டபுள் மீனிங் அர்த்தங்கள் நிரம்பி வழிந்ததால், தமிழகத்தில் இந்த படத்தை திரையிட கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்தது.

கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க இளசுகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளம் தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் நாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி, டேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து பலரும் காரி துப்பாத கொடுமையாக கேவலமாக விமர்சித்தனர். 

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

தற்போது இந்த படத்திற்கான டீசர் புரோமோவை நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் வாழைப்பழம் என்றால், புரோமோ வீடியோவில் நாயை வைத்து காண்டாக்கியுள்ளனர். இதுபோதாது என்று இரண்டாம் குத்து படத்தின் டீஸரை ஆர்யா நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று ட்வீட் செய்துள்ளார் பிரேம்ஜி அமரன். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் பலரும் ஆர்யாவை, பிரேம்ஜியையும் திட்டி தீர்க்க ஆரம்பித்துவிட்டனர்.