இனி அஞ்சு பாட்டு, ஆறு ஃபைட்டு என்று உருவாகும் மசாலாப் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகர் அஜீத் திட்டவட்டமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அந்த முடிவின் எதிரொலியாக இந்தியில் வெளியாகி  விமர்சகர்களால் ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட ‘ஆர்டிகிள்15’ என்ற படத்தின் ரீமேக்கிலும் நடிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

’நேர்கொண்ட பார்வை’யின் தொடர்ச்சியாக மீண்டும் ஹெ.வினோத் இயக்கும் ஆக்‌ஷன் பய்டம் ஒன்றில் அஜீத் நடிக்கிறார். இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

"ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இப்படத்தின் ரீமேக் உரிமையும் எதேச்சையாகவோ, திட்டமிட்டோ போனிகபூர் வசமே உள்ளது.  போனிகபூருடன் வினோத் சொந்தக்கதையிலும் அஜீத் நடிக்கவிருக்க, இப்போது ஆர்ட்டிக்கிள் 15 படத்திலும் தான் தல நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது. அஜீத் எத்தனையோ ஹிட் படங்களை அஜீத் கொடுத்திருந்தாலும், சமூக அக்கறையுடன்கூடிய வெற்றிப்படம் என்றால் அது நேர்கொண்ட பார்வைதான். பெண்கள்மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கருத்தைக்கொண்டு பிங்க் என்றபெயரில் வெளியானதை, அஜீத் வேண்டிவிரும்பி அமிதாப் ரோலை செய்திருந்தார். வழக்கமான அஜீத் ஏற்கும் கதாபாத்திரமே அதுவல்ல என்றபோதிலும், அஜீத் அந்த கேரக்டர் செய்வதில் உறுதியாக இருந்தார். 

அப்படம்  நேர்மையான ரீமேக் என்ற பெயருடன் கலெக்சனையும் அள்ளியது.அதே போல், சாதி இழிவை துகிலுரித்து இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்திலும் தான் தல நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் சாதி எனும் இழிவை அடித்துதுவைக்கும் வலுவான கதையை பொதுவில் கொண்டுபோய் சேர்க்கும் பெருமை அஜீத்தை எப்போதும் சாரும். அஜீத்தின் இந்த மனமாற்றம் அப்படியே நீடித்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது.