Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Trisha Krishnan beauty secrets : சமீபத்தில் 43வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை த்ரிஷா, வயதை பின்னோக்கித் தள்ளும் தனது அழகு ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.

Trisha beauty secrets
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரிஷா கிருஷ்ணன் வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு எமோஷன். பல வருஷங்களுக்கு முன்னாடி 'மௌனம் பேசியதே' படத்தில் பார்த்த அதே துடிப்பும், பளபளப்பும் இன்னைக்கும் அவங்ககிட்ட இருக்கு. கடந்த மே 4-ஆம் தேதி, த்ரிஷா தன்னோட 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனா, அவங்க தோற்றத்துல எந்த மாற்றமும் இல்லாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கு. பலரும் இதை 'ரிவர்ஸ் ஏஜிங்'னு சொல்ல, த்ரிஷா சொல்றது ரொம்ப சிம்பிளான சில விஷயங்களைத்தான். அதைப்பற்றி பார்க்கலாம்.
த்ரிஷா சொல்லும் சீக்ரெட்
'நம்ம என்ன சாப்பிடுறோமோ அதுதான் நம்ம முகத்துல தெரியும்'னு த்ரிஷா உறுதியா நம்புறாங்க. அதனால, ஜங்க் ஃபுட், எண்ணெய் பலகாரங்களுக்கு முழுசா டாட்டா சொல்லிட்டாங்க. சத்துக்கள் நிறைஞ்ச, வீட்டுல சமைச்ச சாப்பாடுதான் அவங்க டயட்ல முக்கியம். அதிக மசாலா, செயற்கை பொருட்களைத் தவிர்த்து, சிம்பிளான உணவு முறையை ஃபாலோ பண்றது சருமத்தோட இயற்கையான பொலிவை மெயின்டெய்ன் பண்ண உதவுது.
காலை எழுந்ததும் லெமன் வாட்டர்தான்!
த்ரிஷாவோட காலைப் பொழுது காபி, டீ-ல தொடங்குறது இல்ல. அதுக்கு பதிலா, எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான தண்ணி அல்லது உடம்புல இருக்குற நச்சுக்களை வெளியேற்ற உதவுற கிரீன் டீ... இதுல ஏதாவது ஒண்ணுதான் அவங்களோட மார்னிங் பழக்கம். இது உடலை சுத்தப்படுத்தி, செரிமானத்தை சுலபமாக்குது. தன்னோட முகப் பொலிவுக்கு இதுதான் முக்கிய காரணம்னு அவங்க பலமுறை சொல்லியிருக்காங்க.
வைட்டமின் சி-யின் மேஜிக்
சரும ஆரோக்கியத்துல சிட்ரஸ் பழங்களோட பங்கு த்ரிஷாவுக்கு நல்லாவே தெரியும். ஆரஞ்சு, எலுமிச்சை மாதிரி வைட்டமின் சி அதிகமா இருக்குற பழங்களை அவங்க உணவுல கண்டிப்பா சேர்த்துக்கிறாங்க. இது சருமத்துல கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி, வயசான தோற்றம் வராம தடுக்குது. அதோட, தினமும் நிறைய தண்ணீர் குடிச்சு சருமத்தை ஹைட்ரேட்டடா வெச்சுக்கவும் அவங்க மறக்குறதில்ல.
ஃபிட்னஸ்ல நோ காம்ப்ரமைஸ்!
ஃபிட்னஸ் விஷயத்துல த்ரிஷா காட்டுற ஒழுக்கம் யாரையும் ஆச்சரியப்படுத்தும். கடுமையான ஜிம் ஒர்க்-அவுட்டைத் தாண்டி, பைலேட்ஸ், ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங், கார்டியோ பயிற்சிகளை அவங்க தவறாம செய்றாங்க. உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, வியர்வை மூலமா நச்சுக்களை வெளியேற்றுது. இது சருமத்துக்கு ஒரு நேச்சுரல் க்ளோ கொடுக்குது.
சிம்பிளான ஸ்கின் கேர்
அத்தியாவசியமான விஷயங்களை மட்டும்தான் த்ரிஷா தன்னோட சருமத்துல முயற்சி செய்வாங்க. ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, சரியா மேக்கப்பை ரிமூவ் பண்ணவும், சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்யவும் அவங்க மறக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல, மனசை அழுத்தம் இல்லாம வெச்சுக்கிறதும், போதுமான அளவு தூங்குறதும்தான் தன்னோட அழகோட அடிப்படைன்னு த்ரிஷா ஞாபகப்படுத்துறாங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

