Bigg Boss Aari About Archana : நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பிரபல சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வென்றார்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வின்னர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல சின்னத்திரை நடிகை அர்ச்சனா அவர்கள் இந்த பிக் பாஸ் சீசன் 7ல் வின்னராக மாறிய நிலையில் இரண்டாம் இடத்தை மணி சந்திரா அவர்களும், மூன்றாவது இடத்தை மாயா அவர்களும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் போட்டிகள் முடிந்து டைட்டிலை அர்ச்சனா வென்று பிறகும் பல சர்ச்சைகள் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகர் ஆரிய அவர்களை விட அதிக அளவில் வாக்குகள் பெற்று அர்ச்சனா வெற்றி பெற்றதாக அவருடைய ஆதரவாளர்கள் சிலர் கூறி வந்தார்கள், ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆரியின் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி செய்த விஷயங்களில் ஒரு சதவீதம் கூட அர்ச்சனா செய்யவில்லை, ஒரு டாஸ்க் கூட ஒழுங்காக செய்யாத அர்ச்சனாவை எப்படி ஆரியோடு ஒப்பிட முடியும் என்று தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைகளை வன்மத்தை கொட்டி தீர்த்து வந்தனர். 

Mansoor Ali Khan: தளபதிக்கே டஃப் கொடுக்கும் அரசியல் வியூகம்! தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான்!

இந்த சூழ்நிலையில் இதைக் கண்டு நடிகர் ஆரி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் மக்களே அவரைப் பற்றி (அர்ச்சனா) இனி பேச வேண்டாம். இது அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாட வேண்டிய ஒரு தருணம், நாம் அனைவரும் இணைந்து அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். 

Scroll to load tweet…

இனி வன்மங்கள் வேண்டாம் அன்பு மட்டுமே போதும் என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ளார். அரியோடு ஒப்பிட்டு பேசப்பட்ட அர்ச்சனா குறித்த சர்ச்சைகள், ஆதியினுடைய இந்த ட்வீட் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆரி இப்பொது இயக்குனர் சேரனின் படத்தில் நடித்துள்ளார்.

இலங்கையில் மரணித்த பாடகி பவதாரிணி.. உடலை பெற விமான நிலையம் வந்துள்ளார் அண்ணன் கார்த்திக் ராஜா - முழு விவரம்!