உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்ததாக சினிமாவிற்காக எதையும் செய்யத் தயங்காதவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். உடலை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்ஸ் வைக்கச் சொன்னாலும் சரி, குண்டாக தொப்பை வைத்து நடிக்கச் சொன்னாலும் சரி, இல்ல ஆளே அடையாளம் தெரியாமல் இளைத்து போகச் சொன்னாலும் சரி தசாவாதாரத்திற்கு தயாராக நிற்பார். பாலிவுட் படங்களில் பல புதுமையான முயற்சிகளையும், கதைகளையும் முயற்சி செய்வதில் முதன்மையானவர். நடிப்பு ராட்சசனான அமீர்கான் தனது படத்திற்காக தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார். 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

அப்படி அமீர் கான் போடாத கெட்டப்புகள் இல்லை, இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். வசூல் சாதனைகளை முறியடிக்கும் பாக்ஸ் ஆபீஸ் மன்னனான இவர், சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா பிரச்சனை உச்ச கட்டத்தில் இருக்கும் இந்த சமயத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர் கானை மற்றொரு சோக சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமீர் கானிடம் அமோஸ் என்பவர் 25 ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

ஆனால் அங்கு சிகிச்சை பலனின் 60 வயதான அமோஸ் உயிரிழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அமீர் கான் மிகுந்த துயரமடைந்தார். அதுமட்டுமின்றி இந்த கொரோனா நேரத்திலும் தன்னிடம் பணிபுரிந்த உதவியாளரின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மனைவி கிரண் உடன் பங்கேற்ற அமீர் கான், அமோஸின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.