பாகிஸ்தான் ராணுவத்திடம்,  தமிழகத்தை சேர்ந்த, விமானி அபிநந்தன் சிக்கியுள்ளது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் ஆர்மியிடம் இருந்து, அபிநந்தன் பத்திரமாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என பலர் கடவுளிடம் தங்களுடைய பிராத்தனையை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் அபிநந்தன் குறித்தும், அவருடைய குடும்பம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அபிநந்தனின் தந்தை வர்தமன், இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய "காற்று வெளியிடை"  படத்தில் ஆலோசகராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி விமானப்படை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், இவரை பாகிஸ்தானை ஆர்மி கைது செய்து உள்ளே அடைத்து வைத்த பின் எப்படி அங்கிருந்து தம்பி வந்து, மீண்டும் இந்திய விமான படைக்கு பணியாற்றுவார் என்பது போன்று கதை அமைத்திருக்கும்.

இந்த படத்திற்காக அபிநந்தனின் தந்தை ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் வர்தமன், தன்னுடைய அனுபவத்தை வைத்து, இந்த படம் உருவாக மணி ரத்தனத்திடம் ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.