பாலிவுட் திரையுலகின் Big B என அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மகன்  அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

முதலில் தொற்றின் தீவிரம் அதிகம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் இடையில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக கடந்த 17ம் தேதி நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  10 நாட்களாக சிகிச்சையில் இருந்த ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் பூரண குணமடைந்து ஜூலை 27ம் தேதி வீடு திரும்பினார். தங்களுக்கு பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு இதயம் உருக நன்றி தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

கடந்த 23 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சனுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்தது. இதையடுத்து அமிதாப் பச்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் வீடு திரும்பியுள்ளேன். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடவுளின் கருணை, பாபுஜியின் ஆசி மற்றும் நண்பர்கள், ரசிகர்களின் பிரார்த்தனையால் நானாவதி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினாலும் இந்த நாளைப் பார்க்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க:  துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

தான் குணமடைந்து வீடு திரும்பிய போதும் மகன் அபிஷேக் பச்சன் தொடர் சிகிச்சையில் இருப்பது அமிதாப் பச்சனை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில்  இன்று தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதாக  அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மதியம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. நான் சொன்னது போலவே வென்றுவிட்டேன். எனக்காகவும், எனது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி என பதிவிட்டுள்ளார்.