ஈரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள 'சப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிப்பில், இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்' சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், மற்றும் திரில்லர் படம் 'சப்தம்.' தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. 

இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்! ரொம்ப கஷ்டமா இருக்கு... கேப்டனுக்காக கண்ணீர் விட்ட பிரபலம்!

மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய் 2 கோடி செலவில்,120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரம்மாண்டமாக செட் உருவாக்கி படம் பிடித்துள்ளனர். குறிப்பாக சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி இசைக்காக தமன் மற்றும் படக்குழுவினர் ஹங்கேரி செல்ல உள்ளனர். 

Scroll to load tweet…

Aditi Rao: டீப் நெக் ஜாக்கெட்... சரிந்து விழும் தாவணி! ஜொலிக்கும் நகைகளோடு.. கார்ஜியஸ் குயின் அதிதி ராவ்!

இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மகாமுனி படம் மூலம் கவனம் பெற்ற அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, இதே இயக்குனருடன் ' வல்லினம்' படத்திற்காக தேசிய விருது பெற்ற 'சாபு ஜோசப்' படத்தொகுப்பு செய்துள்ளார். சப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள உள்ள நிலையில், டீசர் மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர். மேலும் ஃபர்ஸ் லுக் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D