Sabdham Review : அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் சப்தம் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அறிவழகன். இவர் ஆதி நடித்த ஈரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், பின்னர் வல்லினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தார். ஈரம் படத்தில் ஆதியுடன் பணியாற்றிய அறிவழகன் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் தான் சப்தம். ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து திகிலூட்டிய அவர், இப்படத்தில் ஒலியை வைத்து திகிலூட்டி இருக்கிறார்.

சப்தம் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 28ந் தேதியான இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Sabdham Trailer : திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது சப்தம் டிரைலர்

சப்தம் டெக்னிக்கலாக அருமையான படம். தமனின் சவுண்டு டிசைன் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதி, லைலா, லட்சுமி மேனன், சிம்ரன் ஆகியோர் திறம்பட நடித்து சப்தம் படத்தை ஒர்த்தானதாக மாற்றி இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நீங்கள் ஹாரர் அல்லது திரில்லர் படங்களின் ரசிகராக இருந்தால் சப்தம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் கொடுக்கும். இயக்குனர் படத்தில் பதைபதைப்பை சிறாப்பாக கையாண்டுள்ளார். அதிலும் சில காட்சிகள் நடுங்க வைக்கிறது. தமன் தான் இப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அவரின் சவுண்டு டிசைன் மற்றும் இசைக்கு மிகப்பெரிய கைதட்டல்கள் கொடுக்கலாம் என பாராட்டி இருக்கிறார்.

Scroll to load tweet…

பொதுவாகவே சவுண்டு டிசைன் தான் பேய் படங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆனால் சப்தம் படத்தில் சவுண்டு தான் திகிலூட்டுகிறது. அருமையான சவுண்டு டிசைன். பேய் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு சப்தம் கண்டிப்பாக பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சப்தம் அற்புதமாக எழுதப்பட்ட, சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர் திரைப்படம். இப்படம் டெக்னிக்கலாக அருமை, குறிப்பாக சிறந்த சவுண்டு டிசைன் மற்றும் மிக்சிங். முதல் பாதி சிறப்பாக உள்ளது. இண்டர்வெல் காட்சி வேறலெவல். இரண்டாம் பாதி ஓகே ரகம் தான். நிச்சயமாக சப்தத்தை விட ஈரம் சிறந்த படம் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Sabdham : மாறுபட்ட வேடத்தில் சிம்ரன்.. மிரட்டும் லட்சுமி மேனன் - த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர் இதோ