கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படத்தை இயக்கியவர் ராம். இதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்கி வரும் படம் பேரன்பு. இந்த படத்தில் முக்கிய சில பிரபலங்கள் நடிக்கிறார்கள். அதில் குறிப்பாக  மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் படத்தில் நடித்த நடிகை சாதனா, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் கதைக்களமே, கொடைக்கானலை மையமாக வைத்து எடுத்துள்ளது தான்...

இந்த படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் திருநங்கை அஞ்சலி அமீர்.

மிக அழகாகவும், திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ள அஞ்சலி அமீரை இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே மம்முட்டி தான் என்பது கூடுதல் சிறப்பு.

அதாவது, இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மம்மூட்டி தான்,அஞ்சலி அமீரை இயக்குனர் ராமிடம் அறிமுகம் செய்து வைத்து உள்ளாராம்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சென்று உள்ளார். மம்மூட்டி.அந்த நிகழ்ச்சி திருநங்கைகள் கலந்துக்கொண்டுள்ள நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கை இப்படி எல்லாம் இவ்வளவு அழகாகவும், திறமையாகவும் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார் மம்மூட்டி. 

இந்நிலையில் தான், இயக்குனர் ராம் தன் படத்தில் திருநங்கை கதாப்பாத்திரம் ஒன்று உள்ளது என தெரிவிக்கவே, உடனடியாக அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு திறமையை வெளிப்படுத்திய அஞ்சலி அமீரை இயக்குனரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த படத்தில், மம்மூட்டிக்கு ஜோடியாக  நடிப்பவர் அஞ்சலி அமீர் தான் என்பது  குறிப்பிடத்தக்கது.