பிரபல மூத்த நடிகையாகவும், பத்திரிக்கையாளராகவும் மற்றும் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் பெட்ரிஷியா போஸ்வொர்த். இவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கொரோனவை கண்டு நடுங்கும் உலக நாடுகள்:

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து, நடுத்தரமான வயதுடையவர்கள் மற்றும் இளம் வயதினரை மீட்பதே, மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், வயது முதிந்தவர்கள் உயிரிழப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் பிரபலங்கள்:

ஹாலிவுட் பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து  கொரோனாவின் தாக்கத்தில் உயிர் இழந்து வரும் சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஜாஸ் வீரர் மனு திபாங்கோ, ஆடம் ஷெல்சிங்கர், மார்க் ப்ளம் மற்றும் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரிஷிய மறைவு:

ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த 86 வயது நடிகை பெட்ரிஷியாவிற்கு, நடிகை ஏப்ரல் 2 ஆம் தேதி திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இவரை சோதனை செய்த மருத்துவர்கள், பெட்ரிஷியாவிற்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும், அதனை அவருடைய உடல் ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். 

பெட்ரிஷியா போஸ்வொர்த்  'தி நன்ஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது மட்டும் இன்றி, பத்திரிக்கையாளராகவும் , எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.