Asianet News TamilAsianet News Tamil

உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் 4 இயக்குனர்கள்..வெளியான சுவாரஸ்ய தகவல்

படம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் படத்தை முடித்து திரைக்கு கொண்டுவர பட குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

4 directors in Ulaganayakan Indian 2
Author
First Published Sep 14, 2022, 4:35 PM IST

கடந்த 1996 -ம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்த படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். கமலஹாசன் இரட்டை வேடத்திலும், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். லஞ்ச ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சுதந்திரப் போராட்ட வீரரின் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்க பட்டிருந்தது.

 தனது மகன் லஞ்சம் பெறுகிறார் என்பதை அறிந்த அந்த முதியவர். மகன் என்று கூட பாராமல் அவரை கொலை செய்யும் கதை களத்தை இந்த படம் கொண்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.  இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்குனர் சங்கர் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் போட்டோ சூட் நடத்தப்பட்டது.  படம் கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. கடந்த 2020 ம் ஆண்டு பிப்ரவரிகள் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் சினிமா தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

4 directors in Ulaganayakan Indian 2

அதை அடுத்து கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாகவும், அதிக பட்ஜெட் எகிரி விட்ட காரணத்தாலும் படம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பட தயாரிப்புடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று விட்டது. நீதிமன்றமும் இருவரும் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வழக்கை  தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு..பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு 

 ஒருவழியாக சமீபத்தில் படத்திற்கான அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். கமலஹாசன் உடன் ரகுல் ப்ரீத்தி சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வெண்ணிலா கிஷோர் என பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

4 directors in Ulaganayakan Indian 2

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் 3 இயக்குனர்கள் இணைகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கரின் உதவி இயக்குனர்களாக இருந்து தற்போது பிரபல இயக்குனர்களாக வலம் வரும் வசந்தபாலன், சிம்புதேவன், அறிவழகன் மூவரும் சங்கருடன் கூட்டணி அமைத்துள்ளனர். தற்போது ராம்சரணியின் 15 வது படத்தில் ஷங்கர் பிஸியாக இருக்கிறார். இதனால் கமலஹாசனின் காட்சியை மட்டும் ஷங்கர் படமாக்குவதாகவும் மற்றவர்களின் காட்சியை மற்ற 3 இயக்குனர்களுக்கும் சங்கர் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

இவர்கள் தனித்தனியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட போஷனை எடுத்து முடிப்பார்கள் என தெரிகிறது அதோடு படம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் படத்தை முடித்து திரைக்கு கொண்டுவர பட குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios