அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது நிலவி  வரும் கொரோனா பிரச்சனை காரணமாக, திரைப்படங்களை தற்சமயம் திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத நிலையில், 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தை  தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுவும் வெளியாகாத நிலையில், “பொன்மகள் வந்தாள்” படத்தின் விளம்பரத்திற்காகவே ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தை பேசியிருக்கலாம் என்று சிலர் சாடி வந்தனர். 

இதையும் படியுங்க: பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!
 

இது ஒருபுறம் இருக்க, மனைவியின் பொன்மகள் வந்தாள், படத்தை திரையரங்குகளில் திரையிடாமால் நேரடியாக ஒடிடியில் திரையிட முடிவெடுத்த சூர்யா நிறுவனங்களுக்கும், அவர் சார்ந்த நிறுவனத்திற்கும் ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். எனவே சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே பேச்சு அடிபட்டு அடிபட்டது.

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ஆதரவாக மொத்தம் 30 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேர்ந்து,  கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதில் கூறியுள்ளதாவது... 

இதையும் படியுங்க: இளகிய இடையை தவழ பிடித்திருக்கும் மெல்லிய புடவை..! பின்னழகு... முன்னழகு... இரண்டையும் காட்டி மயக்கும் சாக்ஷி!

அனைவருக்கும் வணக்கம்,  திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும்.

இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்க: பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமா உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீ திவ்யா! அதிரவைக்கு உண்மை!
 

தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம். இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்” என கூறி, சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு, 30 தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.