சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக, இயக்க உள்ள படம் குறித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் யங் ஹீரோ குறித்தும், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள 3 இளம் நாயகிகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக, இயக்க உள்ள படம் குறித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் யங் ஹீரோ குறித்தும், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள 3 இளம் நாயகிகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: அனிகாவிற்கு அடித்த ஜாக்பார்ட்...! சூப்பர் ஸ்டாருடன் பிளைட்டில்... வேற லெவல் போட்டோஸ்..!

கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கி உள்ளதால், வெங்கட் பிரபு தற்போது சிம்புவை வைத்து இயக்கி முடித்துள்ள படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் சற்று தாமதமாகியுள்ளது. எனினும் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளை சிம்பு முடித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசின் தளர்வுகளுக்கு பின், மீண்டும் இந்த படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை இயக்கி முடித்த கையேடு அடுத்த படத்திற்கும் வெங்கட் பிரபு தயாராகி விட்டார். தற்போது இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாக துவங்கியுள்ளது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்:சாலையோர மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இவருக்கு ஜோடியாக மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி... ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் ஆகியோர் ஹீரோயின்களாக கமிட் ஆகி உள்ளதாகவும் மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த ஷாலினி அஜித்! எந்த படத்தில் தெரியுமா?

பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் இந்த படம், கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்த பின்னர், தமிழக அரசு தளர்வுகள் அறிவித்த பின்னர் நடைபெறும் என கூறப்படுகிறது. வெங்கட் பிரபு பாணியின் இந்த படமும் காதல் காமெடி கலந்த கதையம்சத்தோடு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.