அனிகாவிற்கு அடித்த ஜாக்பார்ட்...! சூப்பர் ஸ்டாருடன் பிளைட்டில்... வேற லெவல் போட்டோஸ்..!
16 வயதிலேயே பல விளம்பர படங்களிலும், முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா, தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சனுடன் விளம்பபார படம் ஒன்றில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.
கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, மலையாளம் படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக் மூலமாக ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளார்.
மேலும் பல்வேறு விளம்பர படங்களிலும் நடிப்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதே இவரை திரையுலகிலும், மாடலிங் துறையிலும் பிசியாகி இயங்க வைத்துள்ளது.
இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து, விளம்பரப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே பார்க்கப்படுகிறது.
பிஸ்கட் விளம்பரம் ஒன்றில், அம்பிதாபச்சனுடன் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர், சமூக வலைத்தளத்தில் வெளியிட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.