சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தியில் மிகவும் பிரபலமான தொடர்களான Crime Patrol, மற்றும் Laal Ishq and Meri Durga போன்ற சீரியல்களிலும், நடிகர் அக்ஷய் குமார் நடித்த 'பாட் மேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளவர், நடிகை பிரோக்ஷ மேத்தா. 25 வயதே ஆகும் இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவருடைய அறைக்கு இரவு தூங்க சென்ற நடிகை பிரோக்ஷ, திங்கள் கிழமை இரவே (மே 25 ) அன்று திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இறந்ததை அவருடைய தந்தை தான் முதலில் பார்த்துள்ளார், பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இவரின் தற்கொலை முடிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவருடைய குடும்பத்தினர் மத்தியில் விசாரித்த வரை, குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றும், மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்தாரா. அல்லது காதல் பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.