பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள "2 . ௦" திரைப்படம் மிக பிரமாண்டமாக நாளை வெளியாக உள்ளது. 

ரஜினி ரசிகர்கள் இப்போதே திரைப்படத்தை வரவேற்க தயாராகி விட்டனர். திரையங்கங்களில் பிரமாண்ட கட்டவுட்கள் வைத்து பிரமிக்க வைத்து வருகிறார்கள். 

தமிழகத்தில் மட்டும் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியாகும் '2 .0 ' படத்திற்கு வட இந்தியாவில் அதிக படியான எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் டிக்கெட் விலை அதிகாரபூர்வமாக 5000 ரூபாய்க்கு விற்பனையாகும் என வட இந்திய திரையரங்கம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதே போல் இப்படி ஒரு சிறப்பை பெட்ரா முதல் படம்  2.O. அதனால் தென் மாநிலங்களை காட்டிலும் குறைவான தியேட்டர்களில் வெளியாகும் வட இந்தியாவில் அதிக வசூல் குவிக்க வாய்ப்பிருக்கிறது. 

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் சுமார் 2500 திரைகளில் 2.0 ரிலீஸ் செய்யப்படுகிறது. இதைவிட குறைவாகவே வட இந்தியாவில் தியேட்டர்களில் 2.O வெளியிடப்பட்டாலும் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் மொத்த வசூல் அதிகரிக்கும். உலகம் முழுவதும் சுமார் 7000 திரைகளில் 14 மொழிகளில் நாளை வெளியாகும் 2.O திரைப்படம் முதல் நாள் மொத்த வசூல் 150 கோடியை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.