100 Chota Beam 100 Mutha Butloo can not stand in front of the papu
கார்ட்டூன் படங்களின் தலைவன் “பாப்பாய்” என்றே சொல்ல வேண்டும்.
இந்த தொடர்தான், இப்போ வரைக்கும் குழந்தைகள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுததியுள்ளது. நல்ல தாக்கம் என்பது தான் முக்கியமான விசயம்.
ஆமாம், அப்போ கீரையின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்திய பெருமை பாப்பாய்யே சேரும்.
இந்த கார்ட்டூனை பார்த்துவிட்டு எனக்கும் கீரை வேணும் என்று சொன்ன குழந்தைகள் தான் அதிகம்.
இதில், கீரை மட்டும் இல்ல, வில்லனாக வரும் புளுட்டோ செய்யும் தவறுகளால் பாப்பாய் பாதிக்கப்பட்டாலும், புளூட்டோ மண்னிப்பு கேட்கும்போது உடனே மமன்னிக்கும் குணத்தை குழந்தைகளுக்கு பாப்பாய் வளர்த்தார்.
ஆனால், இப்போ வருகிற சோட்டா பீம், மோட்டு பட்லு போன்ற கார்ட்டூன்கள் லட்டு, சமோசா போன்ற ஸ்நாக்ஸ் உணவுப் பொருட்களை குழந்தைகள் மத்தியில் திணிக்கிறது. இவை உடலுக்கு கேடு என்று தெரிந்தும், இந்த கெடுதலை குழந்தைகள் மனதில் பதிக்கிறது இந்த கார்ட்டூன்கள்.
இப்போ சொல்லுங்க 100 சோட்டா பீம், 100 மோட்டு பட்லு வந்தாலும் பாப்பாய் முன்னாடி நிற்க முடியாது தானே…
பாப்பாய் கார்ட்டூன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தெரியுமா?
எல்சி கிரிஸ்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட “பாப்பாய் தி செய்லர்” என்ற கார்ட்டூன் கதாபாத்திரம், 1929-ஆம் ஆண்டு காமிக் புத்தகமாக வெளிவந்தது. 1930-ஆம் ஆண்டுகளில் மிகப்பிரபலமாக இருந்த இந்த கார்ட்டூன் கதாபாத்திரம், இப்போ வரைக்கும் சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
