இந்திய பங்குச் சந்தை இன்று சரிந்தது. டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை, ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் சரிவு காரணங்களாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian share Market Sensex, Nifty down today: சென்செக்ஸ் 1,395.67 புள்ளிகள் அல்லது 1.80 சதவீதம் சரிந்து 76,019.25 ஆகவும், நிஃப்டி 362.15 புள்ளிகள் அல்லது 1.54 சதவீதம் சரிந்து 23,157.20 ஆகவும் குறைந்து இன்று வர்த்தகம் ஆகி வருகிறது. சுமார் 2437 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1102 பங்குகள் சரிந்தன. 124 பங்குகள் அதே நிலையில் நீடித்தன. 

டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை:
இந்திய பங்குச் சந்தை இன்று சரிந்து காணப்பட்டது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை என்று கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதித்து இருக்கிறார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2, அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. காலாண்டின் கடைசி மூன்று வாரங்களில் வரி தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கை மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மையை உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வருகிறது. இது வாடிக்கையாளர் முடிவெடுப்பதைப் பாதிக்கலாம் மற்றும் விருப்பப்படி செலவினங்களை குறைத்துக் கொள்ளலாம் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கருத்து தெரிவித்துள்ளது. 

வரியைக் குறைக்க ரெடி! அமெரிக்காவுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவு:
சென்செக்சில் இன்று மோசமாக வர்த்தகம் செய்யும் ஐடி பங்குகளில் முக்கியமானது இன்போசிஸ். இன்று மட்டும் இன்போசிஸ் பங்கின் விலை 2.86% குறைந்து அதாவது 1,525 ரூபாயாக வர்த்தகம் செய்கிறது. மற்ற ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா நிறுவனங்களின் பங்கு மதிப்பும் சுமார் 2.4% குறைந்துள்ளது. 

வங்கி பங்குகளின் மதிப்பு சரிவு:
இத்துடன் இன்று தனியார் வங்கிகளின் பங்குகளின் மதிப்பும் குறைந்து காணப்பட்டது. ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டும் 2.3% சரிந்துள்ளது. முன்பு சிறப்பாக செயல்பட்ட வங்கிப் பங்குகள், விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிதிப் பங்குகள் தலா 2% சரிந்தன. மற்ற பின் தங்கிய நிறுவனங்களில், சன் பார்மா 1.76% குறைந்து ரூ.1,704 ஆக இருந்தது. இது சென்செக்சில் மோசமாக செயல்படும் பங்குகளில் ஒன்றாகும்.

இந்திய பார்மாசூட்டிகல் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவு:
அமெரிக்க அதிபர் ஏப்ரல் 2ஆம் தேதியை அமெரிக்காவுக்கான விடுதலை நாள் என்று அறிவித்து இருந்தார். மெக்சிகோ, கனடா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதிப்பதற்கு டிரம்ப் முடிவு செய்து அறிவித்து இருந்தார். இந்த தாக்கம் இந்தியாவின் பார்மாசூட்டிகல் நிறுவனங்களின் மீது எதிரொலித்துள்ளது. வரி தாக்கத்தை அடுத்து இந்திய பார்மாசூட்டிகல் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. தற்போது உலக நாடுகள் டிரம்பின் வரி விதிப்பு எவ்வாறு இருக்கும் என்று ஆராய்ந்து வருகின்றனர்.

97% வரை லாபம்.. அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள் லிஸ்ட்

முதலீட்டாளர்கள் காத்திருப்பு:
"வரியைப் பொருத்து உலக நாடுகளின் பொருளாதார தாக்கம் வெளிச்சத்திற்கும் வரும். வரிகள் கடுமையாக இருந்தால், சந்தைகள் மற்றொரு சரிவை சந்திக்க நேரிடும். முதலீட்டாளர்கள் காத்திருந்து மீண்டும் முதலீடுகளை துவங்கலாம் என்று காத்திருக்கின்றனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) மார்ச் 28 அன்று நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். ரூ.4,352 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர். இதற்கிடையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) தொடர்ந்து இரண்டாவது நாளாக முதலீட்டில் ஈடுபட்டு வந்தனர். ரூ.7,646 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினர்.

ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி:
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். இதேபோல் தான் மெக்சிகோ நாட்டிற்கும் மிரட்டல் விடுத்து இருந்தார் டிரம்ப். மேலும், ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்க டிரம்ப் அச்சுறுத்தல்களைப் பின்பற்றினால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், எண்ணெய் விலை திங்களன்று சுமார் 2% உயர்ந்து ஐந்து வார உச்சத்தை எட்டின. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.11 டாலர் (1.5%) உயர்ந்து 74.74 டாலர் ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 2.12 (3.1%) டாலர் அதிகரித்து 71.48 டாலர் ஆகவும் நிறைவடைந்தது.