MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வரியைக் குறைக்க ரெடி! அமெரிக்காவுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

வரியைக் குறைக்க ரெடி! அமெரிக்காவுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

பாதாம், வால்நட், கிரான்பெர்ரி, பிஸ்தா உள்ளிட்ட பல அமெரிக்க விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்திய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயல்கிறது.

2 Min read
Author : SG Balan
| Updated : Mar 30 2025, 06:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India US Tariff Talks

India US Tariff Talks

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை:

அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நம்பிக்கையில், பாதாம் மற்றும் கிரான்பெர்ரி போன்ற அமெரிக்க பண்ணை பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளைக் குறைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இரு தரப்பினருக்கும் சந்தை அணுகலை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த திட்டம் வந்துள்ளது.

புதிய வர்த்தக தடைகளைப் போக்குவதற்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும் இந்தியா எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கட்டணக் குறைப்புக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
India US Tariff Talks

India US Tariff Talks

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருகின்றன என்றும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி இரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்தியா ஒரு சாதகமான ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், குறிப்பாக விவசாயத் துறையில் அமெரிக்கா கோரும் சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், பால் பொருட்கள், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் போன்ற சில பொருட்கள் விவாதத்திற்குரியதாக உள்ளன. இந்தப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க இந்திய தயங்குகிறது.

34
India US Tariff Talks

India US Tariff Talks

விஸ்கி மீதான வரிக் குறைப்பு:

கடந்த மாதம், போர்பன் விஸ்கி மீதான வரிகளை இந்தியா 150% லிருந்து 100% ஆகக் குறைத்தது. தற்போது, ​​கிரான்பெர்ரி, பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் 30% முதல் 100% வரை உள்ளன, அதே நேரத்தில் பயறு வகைகளுக்கான வரிகள் சுமார் 10% ஆகும்.

இதற்கு ஈடாக, மாதுளை, திராட்சை போன்ற பழங்கள், அரிசி உள்ளிட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கச் சந்தையில் அதிக வாய்ப்பு அளிக்க இந்தியா அழுத்தம் கொடுக்கிறது.

44
India US Tariff Talks

India US Tariff Talks

2025 இலையுதிர்காலத்திற்குள் இருதரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், இந்தியாவிற்கான அமெரிக்காவின் விவசாய மற்றும் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் 452 மில்லியன் டாலர் மதுபானங்களும் 1.3 பில்லியன் டாலர் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அடங்கும். இதற்கிடையில், இந்தியா அமெரிக்காவிற்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி சுமார் 5.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கட்டண உயர்வு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
நரேந்திர மோடி
டொனால்ட் டிரம்ப்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved