Share Market Today: ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றம்:LIC பங்கு 7% ஏற்றம்

வாரத்தின் முதல்நாளான இன்று காலை நேர வர்த்தகத்தில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் ஏற்ற, இறக்கத்தில் உள்ளன. நிப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் லேசான உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

The stock market is turbulent. Sensex and Nifty open flat, but LIC gains 7%.

வாரத்தின் முதல்நாளான இன்று காலை நேர வர்த்தகத்தில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் ஏற்ற, இறக்கத்தில் உள்ளன. நிப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் லேசான உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை வர்த்தக தினத்தில் சர்வதேச சூழல் காரணமாக, முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால், சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, நிப்டி 52 வாரங்களில் இல்லாத உயர்வைப் பெற்றது. 

எல்ஐசி(LIC) காப்பீடு நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் 10 மடங்கு அதிகரிப்பு! என்ன காரணம்?

அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு அக்டோபரில் உயரவில்லை. இதனால் பெடரல் வங்கி வட்டிவீதத்தையும்  பெரிதாக அதிகரிக்காது என்ற விஷயம் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்தது. இருப்பினும் வட்டிவீதம் உயர்த்தப்படும் என்பதில் மாற்றமில்லை.

The stock market is turbulent. Sensex and Nifty open flat, but LIC gains 7%.

இது தவிர இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக அதிகரித்து வந்ததும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளி்த்தது. அந்நிய முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்ததும் உள்நாட்டு சந்தையில் சாதகமானபோக்கை ஏற்படுத்தியது.

ஆனால், பெடரல் வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தும் என்ற எண்ணத்தால் முதலீட்டாளர்கள் இன்று காலை முதலே எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால் வர்த்தகம் தொடங்கும் போது சந்தையில் சரிவு காணப்பட்ட நிலையில் பி்ன்னர் சரிவிலிருந்து மீண்டு உயர்ந்தது.

பங்குச்சந்தை உயர்வுக்கு 3 காரணங்கள்! 1100 புள்ளிகளில் சென்செக்ஸ்! 52 வார உயர்வில் நிப்டி

சீனாவில் கொரோனா தாக்கம்முழுமையாக முடியவில்லை, பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருந்து வருகிறது. இதனால் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சோர்வுடன் காணப்படுகிறது.

The stock market is turbulent. Sensex and Nifty open flat, but LIC gains 7%.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 71 புள்ளிகள் உயர்ந்து, 61,866 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 44 புள்ளிகள் உயர்வுடன் 18,394 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, 13 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. 

2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

டாடாஸ்டீல், பவர் கிரிட், மகிந்திரா அன்ட் மகிந்திரா, கோடக் வங்கி, டைட்டன், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஏசியன்பெயின்ட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன. மாறாக, நெஸ்ட்லேஇந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஐடிசி, சன்பார்மா உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்துள்ளன.

The stock market is turbulent. Sensex and Nifty open flat, but LIC gains 7%.

எல்ஐசி நிறுவனம் 2வது காலாண்டில் 10 மடங்கு லாபத்தை ஈட்டியதாக பங்குச்சந்தையில் தெரிவித்தது. இதையடுத்து, எல்ஐசி பங்கு இன்று வர்த்தகம் தொடங்கியதும் ஆர்வத்துடன் வாங்கப்பட்டதால் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. 

நிப்டியில் மருந்துத்துறை, உலோகத்துறைபங்குகள் விலை குறைந்துள்ளன, தகவல் தொழில்நுட்ப பங்குகள், பொதுத்துறை வங்கிப் பங்குகள் ஏற்றத்துடன் நகர்கின்றன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios