Asianet News TamilAsianet News Tamil

Moodys India: 2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகக் குறைத்து, கடன்தர ரேட்டிங் நிறுவனமான மூடிஸ்(Moodys) கணித்துள்ளது.

Moodys downgrades India's GDP growth forecast for 2022 from 7.7% to 7%.
Author
First Published Nov 11, 2022, 3:20 PM IST

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகக் குறைத்து, கடன்தர ரேட்டிங் நிறுவனமான மூடிஸ்(Moodys) கணித்துள்ளது.

உலகளவில் மந்தமான பொருளாதார சூழல், உள்நாட்டில் கடன்களுக்கான அதிக வட்டி ஆகியவை பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

குளோபல் மேக்ரோ அவுட்லுக்-2023-24 என்ற தலைப்பில் மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது 
கடந்த சில மாதங்களுக்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2வதுமுறையாக மூடிஸ் குறைத்துள்ளது. கடந்த மே மாதம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாகக் குறைத்து கணித்தது. தற்போது 7.7 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக மூடிஸ் கணித்துள்ளது.

Moodys downgrades India's GDP growth forecast for 2022 from 7.7% to 7%.

இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையான ஜிடிபி வளர்ச்சி என்பது 7.7 சதவீதத்திலிருருந்து 7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு அதிகரித்துவரும் பணவீக்கம், வட்டிவீத உயர்வு, உலப் பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணம் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

மிரட்டல்! எச்சரிக்கை! ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் முதல் மெயில்

2023ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், அதன்பின் 2024ம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் உயரும் என தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. 

2022-23ம் ஆண்டில் ஏப்ரல் ஜூன் மாதங்களில் ஜிடிபி 13.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது, இது ஜனவரி-மார்ச் மாதத்தில் இருந்த 4.10 சதவீதவளர்ச்சியைவிடஅதிகமாகும். செப்டம்பர் காலாண்டுக்கு இன்னும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்துக்கு, ரூபாய் மதிப்புச் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மேலும் அழுத்தத்தை உருவாக்கும். இதனால்தான் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்து சென்றுள்ளது.

Moodys downgrades India's GDP growth forecast for 2022 from 7.7% to 7%.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை ரிசர்வ் வங்கி 190 புள்ளிகளை வட்டியில் உயர்த்தி 5.90 சதவீதமாக வட்டி இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டப்படுத்த ரிசர்வ் வங்கி இன்னும் 50 புள்ளிகள்வரை வட்டியில் உயர்த்த வாய்ப்புள்ளது. வட்டிவீத உயர்வு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியபின், ரிசர்வ் வங்கியின் கவனம் பொருளாதார வளர்ச்சியின் பக்கம் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதமாகக் குறைத்திருந்தது, சர்வதேச செலாவணி நிதியம் 7.4 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைந்தது. 

2027ஆம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

ஆசிய மேம்பாட்டு வங்கியும்,  7.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.எஸ் அன்ட் பி நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 8.7 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகவும் குறைத்தது.ரிசர்வ்வங்கியும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்குள்ளாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios