Twitter Elon Musk: மிரட்டல்! எச்சரிக்கை! ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் முதல் மெயில்

டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியபின், முதல்முறையாக ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார்.

First email from Elon Musk to Twitter staff warns of hard times

டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியபின், முதல்முறையாக ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார்.

ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும், வீட்டிலிருந்து வேலைபார்க்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும், கடினமான காலங்கள் கண்முன்னே காத்திருப்பதாகவும் கூறி ஊழியர்களின் வயிற்றில் எலான் மஸ்க் புளியைக் கரைத்துள்ளார்.

First email from Elon Musk to Twitter staff warns of hard times

பேஸ்புக் மெட்டாவின் ஆட் குறைப்பு இந்தியாவிலும் பாதிப்பு ! உண்மை விவரங்கள் என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதிலிருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். 

அடுத்தபடியாக ட்விட்டர் நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் வகையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இதில் ஏறக்குறைய 3500க்கும் மேலான ஊழியர்கள் எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90 சதவீத ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் கூட எலான் மஸ்க்  பெயர் குறிப்பிடவில்லை. டீம் என்றும், அனுப்புனர் பெயரில் ட்விட்டர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

First email from Elon Musk to Twitter staff warns of hard times

11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா

இந்த மின்அஞ்சலை யார் அனுப்பியது, கணினியின் ப்ரோகிராமிங் அனுப்பியதா என்று கூட ஊழியர்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின் ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் மின்அஞ்சல் அனுப்பியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

எலான் மஸ்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்ஞ்சல் சற்று கடினமான வார்த்தைகளுடனும், மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வந்திருந்ததாக ஊழியர்கள் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க் மின்அஞ்சலில் “ இனிப்பான வார்த்தைகளுடன் எந்தவிதமான செய்தி அனுப்பவும் வாய்ப்பில்லை. ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் இருப்போர் இனிமேலும் வீட்டிலுருந்து பணிபுரிய அனுமதிக்க முடியாது. விரைவில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். வாரத்துக்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். ஊழியர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

First email from Elon Musk to Twitter staff warns of hard times

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

ட்விட்டரின் மூலம் கிடைக்கும் வருவாயில், பாதிக்கு மேல் சந்தா மூலம் கிடைப்பதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். நமக்கு முன் இருக்கும் பாதை மிகவும் கடினமானது, வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள், போலிக்கணக்குகள், ஆகியவற்றைக் கண்டறிந்து தடுக்க வேண்டியதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திகள் குறிப்பிட்டுள்ளது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios