MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!

சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை என சொல்லப்படுகிறது. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன. 

2 Min read
Author : Rayar A
Published : Mar 12 2026, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்தின் இதயப் பகுதி திருச்சி
Image Credit : x

தமிழகத்தின் இதயப் பகுதி திருச்சி

தமிழகத்தின் இதயப் பகுதியில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று திருச்சி. தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திற்கும் எளிதாகச் செல்லக்கூடிய வகையில் நடுப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மலைக்கோட்டை நகரான திருச்சி அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ரயில் நிலையம் அருகே அமைந்திருந்த சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பெரும் இடப்பற்றக்குறை ஏற்பட்டது. அங்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்ததால் அவற்றை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

இதனை கருத்தில் கொண்டு திருச்சியின் நகரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பஞ்சப்பூரில் மறைந்த கலைஞர் கருணாநிதி பெயரில் மிக பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது தமிழகத்தின் முதல் ஏசி வசதி கொண்ட பேருந்து நிலையம் என்ற பெருமையை பெற்றது. இந்த பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை
Image Credit : Asianet News

ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை

அதே வேளையில் பேருந்து நிலையம் வந்ததில் இருந்து திருச்சி பஞ்சப்பூர் சென்னை ரேஞ்சுக்கு மாறி விட்டது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டது. 2021-க்கு முன்பு பஞ்சப்பூரில் விவசாய தரிசு நிலம் ஏக்கருக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருந்தது. ஆனால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்த பிறகு ஏக்கருக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக ரியல் எஸ்டேட் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ரியல் எஸ்டேட் தரவுகள் சொல்வது என்ன?

மேலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் வீட்டு மனைகள் சதுர அடிக்கு ரூ.2,500 ‍ முதல் ரூ.4,500 வரை விற்கப்படுவதாகவும் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சில பிரீமியம் இடங்களில் சதுர அடி ₹6,000 முதல் ₹10,000 வரை கூட விற்பனையாவதாக ரியல் எஸ்டேட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
என்ன பெரிய ஏர்போர்ட்... வந்து பாருங்க பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்... அமெரிக்காவை விஞ்சும் அதிசயம்!
Related image2
திருச்சி மக்களுக்கு குட்நியூஸ்! இனி பஞ்சப்பூர் வரை பேருந்துகள் இயங்கும்! வெளியான சூப்பர் அறிவிப்பு
33
தனி வீடுகள் எவ்வளவு?
Image Credit : Getty

தனி வீடுகள் எவ்வளவு?

இது தவிர 2 BHK தனி வீடு (சுமார் 1200 ச.அடி) இடத்தின் அமைவிடத்தைப் பொறுத்து ₹45 லட்சம் முதல் ₹65 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பழைய வீடுகள் சுமார் ₹35 லட்சம் - ₹45 லட்சம் என்ற அளவில் உள்ளன. பேருந்து நிலையம் மற்றும் டைடல் பார்க் பணிகளால், இங்கு வாடகை வீடுகளுக்கான தேவையும் 20-30% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
திருச்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Business : புது பிசினஸ் தொடங்குறதுக்கு முன்னாடி நீங்க தெரிச்சுக்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்!
Recommended image2
Gold Price: தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி நகருமா? ரூ.5,000 டாலரை நெருங்குமா? வெளியான கணிப்பு
Recommended image3
Aadhaar Card: ஆதார் அட்டையை வீட்டில் மறந்துவிட்டீர்களா? வாட்ஸ்அப்பிலேயே சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.. எப்படி?
Related Stories
Recommended image1
என்ன பெரிய ஏர்போர்ட்... வந்து பாருங்க பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்... அமெரிக்காவை விஞ்சும் அதிசயம்!
Recommended image2
திருச்சி மக்களுக்கு குட்நியூஸ்! இனி பஞ்சப்பூர் வரை பேருந்துகள் இயங்கும்! வெளியான சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved