MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மார்ச் 15 கடைசி நாள்.. வரி செலுத்துபவர்கள் கவனிக்கவும்.. இதை கட்டாவிட்டால் அபராதம்!

மார்ச் 15 கடைசி நாள்.. வரி செலுத்துபவர்கள் கவனிக்கவும்.. இதை கட்டாவிட்டால் அபராதம்!

நிதியாண்டு 2025-26க்கான அட்வான்ஸ் டாக்ஸ் இறுதித் தவணையை மார்ச் 15, 2026க்குள் செலுத்த வேண்டும். ஆண்டு வரிப் பொறுப்பு ரூ.10,000-ஐத் தாண்டும் வரி செலுத்துவோர், வட்டி மற்றும் அபராதத்தைத் தவிர்க்க இந்த கெடுவுக்குள் வரியைச் செலுத்துவது கட்டாயமாகும்.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 12 2026, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மார்ச் 15 கடைசி தேதி
Image Credit : Gemini AI

மார்ச் 15 கடைசி தேதி

நிதியாண்டு 2025–26 முடிவுக்கு வரும் நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கடைசி தேதி வந்துள்ளது. குறிப்பாக அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு மார்ச் 15, 2026 மிகவும் முக்கியமான நாளாகும். வருமான வரி துறையின் விதிகளின்படி, ஒருவரின் ஆண்டு வரி பொறுப்பு ரூ.10,000-ஐ கடந்தால், அந்த தொகையை முன்கூட்டியே அட்வான்ஸ் டாக்ஸ் வடிவில் செலுத்த வேண்டும். இதன் கடைசி தவணையை மார்ச் 15க்குள் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வருமான வரி அலர்ட்
Image Credit : Gemini

வருமான வரி அலர்ட்

இந்த கடைசி தேதிக்குள் வரி செலுத்தாமல் தவறிவிட்டால், கூடுதல் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதனால் வரி செலுத்துபவர்கள் தங்களின் கணக்கிடப்பட்ட வரி பொறுப்பை சரியாக கணக்கிட்டு, நேரத்திற்கு முன்பே பணம் செலுத்துவது முக்கியம். இது நிதி ஒழுங்கை பேணுவதற்கும், கடைசி நேர சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் உதவும்.

35
அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட கடைசி நாள்
Image Credit : Gemini

அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட கடைசி நாள்

அட்வான்ஸ் டாக்ஸ் என்பது பெரிய நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. சம்பளத்துடன் கூடுதல் வருமானம் பெறும் பலருக்கும் இந்த விதி பொருந்தும். உதாரணமாக வீட்டு வாடகை வருமானம், வங்கி டெப்பாசிட் வட்டி, டிவிடெண்ட் வருமானம் அல்லது பங்குச்சந்தை முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபம் போன்றவை இருந்தால், அந்த வருமானத்திற்கும் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டி இருக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொழில் வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

45
வருமான வரி சட்டம்
Image Credit : Getty

வருமான வரி சட்டம்

மார்ச் 15க்குள் முழுமையாக வரி செலுத்தப்படவில்லை என்றால், வருமான வரி சட்டத்தின் பிரிவு 234C படி மாதத்திற்கு 1% வட்டி வசூலிக்கப்படும். மேலும் நிதியாண்டு முடிவிற்கு முன் 90% வரி செலுத்தப்படவில்லை என்றால் பிரிவு 234B கீழும் கூடுதல் வட்டி விதிக்கப்படும். இதனால் சிறிய தாமதம் கூட கூடுதல் செலவாக மாறும்.

55
வரித்துறை அறிவிப்பு
Image Credit : Asianet News

வரித்துறை அறிவிப்பு

இன்றைய டிஜிட்டல் காலத்தில் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவது மிகவும் எளிதாகியுள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ e-filing portal மூலம் “e-pay tax” வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். PAN எண்ணை சரியாக உள்ளிட்டு, சரியான மதிப்பீட்டு ஆண்டு தேர்வு செய்வது முக்கியம். நெட் பேங்கிங், டெபிட் கார்டு அல்லது UPI மூலம் வீட்டிலிருந்தபடியே இந்த பணத்தை செலுத்த முடியும். கடைசி நேர தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க மார்ச் 15க்கு முன்பே வரியை செலுத்துவதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வருமான வரி
வரி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் 66% நேரம் முடிந்தது! சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்கள்
Recommended image2
சொந்த வீடு, குழந்தை கல்வி இலக்கா? செலவுகளை குறைக்க 4 பெஸ்ட் சேமிப்பு ஃபார்முலா!
Recommended image3
DMart Diwali Tips: தீபாவளிக்கு டி-மார்ட்டில் ஷாப்பிங் போறீங்களா? எந்த நாள், எந்த நேரம் சிறந்தது?
Related Stories
Recommended image1
ஆதார் அட்டையில் இனி பெயரை எத்தனை முறை மாற்றலாம்? மத்திய அரசின் புதிய விதி
Recommended image2
காலியாக உள்ள ப்ளாட்டில் பணம் சம்பாதிக்கலாம்! இதை செய்தால் 100% வருமானம் கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved