Share market today: மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றம் காணப்பட்ட நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று சரிவைச் சந்தித்தது. ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கினாலும், உக்ரைன் அதிபரின் பேச்சால், மீண்டும் சரிந்தது.

Share market today: மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றம் காணப்பட்ட நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று சரிவைச் சந்தித்தது. ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கினாலும், உக்ரைன் அதிபரின் பேச்சால், மீண்டும் சரிந்தது.

நம்பிக்கை

இதைப்படிங்க:  பங்குச்சந்தையில் பிற்பகலுக்குப்பின் புகுந்த கரடி; 5 நாட்களுக்குப்பின் சரிவு காரணம் என்ன?

கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது, இந்தியாவில் பணவீக்கம் பெரிதாக அதிகரிக்காதது போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஜோராக நடந்தது, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை மாற்றினர்.

 3நாட்கல் விடுமுறைக்குப்பின் இன்று காலை உற்சாகத்துடன் ஏற்றத்துடன் நடந்தது. மும்பை சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்வுடனும், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்தநிலையில் வர்தத்கம் நடைபெற்றது.

இதைப் படிங்க: பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

உக்ரைன் அதிபர் பேட்டி

ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், “ ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும். பேச்சு தோல்வியில் முடிந்தால், நிச்சயம் 3-வது உலகப் போருக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதுமட்டும்லலாமல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியனும் ஆலோசித்து வருகிறது. இதுதவிர ரஷ்ய அரசு தான்வாங்கிட கடனுக்கு வட்டியை எவ்வாறு செலுத்தப்போகிறது என்ற கேள்விகள் முதலீட்டாளர்களுக்கு பெரிய சந்தேகத்தை எழுப்பியது. 

மீண்டும் சரிவு

உக்ரைன் அதிபரின் பேச்சு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிந்துவிடும் என நினைத்திருந்த முதலீட்டாளர்களுக்கு உக்ரைன் அதிபர் பேச்சு, அச்சத்தை ஏற்படுத்தியதால், சந்தையில் பங்குகள் ஊசலாட்டத்தை சந்தித்து பிற்பகலுக்குப்பின் சரியத் தொடங்கியது.

மும்பைப் பங்குச்சந்தையில் மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 574 புள்ளிகள் சரிந்து, 57,289 புள்ளிகளில் முடிந்து. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 169 புள்ளிகள் வீழ்ந்து, 17,117 புள்ளிகளில் நிலை கொண்டது.

இதைப் படிங்க:  4 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியது

இழப்பு

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 20 பங்குகள் சரிந்தன. குறிப்பாக அல்ட்ரா டெக் சிமெண்ட் 3 சதவீதம் சரிந்தது, எஸ்பிஐ, லார்சன் அன்ட் டூப்ரோ, பவர்கிரிட், இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி,நெஸ்ட்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. 

குறிப்பாக மாருதி, இன்போசிஸ், விப்ரோ,டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், டைட்டன், சன்பார்மா, டிசிஎஸ், ஹெச்சிஎல், டாக்டர் ரெட்டீஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன.நிப்டியில் உலோகம், ஊடகத்துறை பங்குகள் மட்டுமே லாபமடைந்தன. மற்ற துறைபங்குகள் லாபத்துடன் கைமாறின.