Share market today: மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை தொடர்ந்து 6-வதுநாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி, கைமாற்றுகிறார்கள்.

மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை தொடர்ந்து 6-வதுநாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி, கைமாற்றுகிறார்கள்.

பேச்சுவார்த்தை

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஒருபக்கம் நடந்தாலும், இருதரப்புக்கும் இடையே பேச்சு நடக்கும் சூழல் உலகளவில் பதற்றத்தைத் தணிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல், உக்ரைன், ரஷ்யாஇடையிலான பேச்சுவார்த்தை தொடங்குவதையடுத்து, கச்சா எண்ணெய் விலையும் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கைய அளித்துள்ளது.

இதைப் படிங்க: காளை ராஜ்ஜியம்; தொடர்ந்து 5-வதாக நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை

பணவீக்கம்

முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்த்த உள்நாட்டின் சில்லரை பணவீக்கமும் பெரிதாக உயரவில்லை. கடந்த ஜனவரி மாதத்தைவிட சற்று பிப்ரவரி மாதத்தில்அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை அளவை மீறினாலும், பெரிதாக கவலைப்படத்தேவையில்லை என பொருளதார வல்லுநர்கள் தெரிவித்ததும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.

16ம் தேதி அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துமா அல்லது தற்போதைய நிலை தொடருமா என்பதுதான் முதலீட்டாளர்களின் கேள்விியாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், சந்தை வல்லுநர்கள் பெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தும் எனத் தெரிவித்துள்ளனர். வட்டி வீதம் உயர்த்தப்பட்டால் மட்டும்இந்தியப் பங்குச்சந்தைகளில் சலசலப்பு ஏற்படும் இல்லாவிட்டால், தொடர்ந்து ஏற்றத்துடனே இருக்கும்.

இதைப் படிங்க படிச்சிட்டு முதலீடு செய்யுங்க! அடுத்தவாரம் பங்குச்சந்தையை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

உற்சாகம் 

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையில் 200 புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்பட்டது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வருவதால், வர்த்தகம் சாதகமான போக்கில் செல்கிறது.

சரிவு
மும்பை பங்குச்சந்தையில், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக்மகிந்திரா, கோடக்வங்கி, இன்போசிஸ் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, மாருதி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ உள்பட 24 பங்குகளும் லாபத்தோடு நகர்கின்றன.

இதைப் படிங்க: கடும் ஏற்ற இறக்கம்: லேசான உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை

லாபமான துறைகள்

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில், வங்கி, ஆட்டோமொபைல், நிதிச்சேவை, எப்எம்சிஜி, மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட் துறைகள் ஆகியவை லாபத்தோடு நகர்கின்றன. அதேநேரம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகத் துறை பங்குகள் சரிவில் உள்ளன.