Share market today: மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 900 புள்ளிகளும், நிப்டி 16,850 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 900 புள்ளிகளும், நிப்டி 16,850 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
உற்சாகம்

கச்சா எண்ணெய் விலை உயர்வை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த முதலீட்டாளர்ளுக்கு கடந்த சில நாட்களாக எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து வந்தது ஆறுதலை அளித்தது. இன்றைய சந்தை நிலவரப்படி பேரல் 110டாலர் வரை குறைந்ததால், காலையிலிருந்தேஉற்சாகத்துடன் வர்த்தகத்தை தொடர்ந்தனர்.
இதைப் படிங்க: paytm share: பேடிஎம் பங்குகள் செம அடி: சரிவுக்கு காரணமான இரு விஷயங்கள்
பெட் வங்கி
வரும் 16ம் தேதி அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துமா அல்லது தொடர்ந்து இப்போது இருக்கும் நிலை நீடிக்குமா என்பதுதான் முதலீட்டாளர்களின் கவலையாக இருக்கிறது.
இரு அம்சங்கள்
பங்குச்சந்தையில் இன்று இரண்டு முக்கிய அம்சங்களையும் கவனிக்க வேண்டும். முதலாவதாக ஹெச்டிஎப்சிவங்கிக்கு கடந்த 2 ஆண்டுகளாக டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கையைத் தொடங்க ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடை நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் காலை முதல் உயர்ந்தது.

பேடிஎம் சரிவு
2-வதாக பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க கடந்த சனிக்கிழமை ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. அந்தநிறுவனம் ஐடி தணிக்கை நடத்தியபின்புதான் அடுத்தஉத்தரவு பிறப்பிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனால் பேடிஎம் நிறுவனப் பங்குகள் 13 சதவீதம் சரிந்து 700ரூபாய்க்கும் கீழ் வந்தன.
இதையும் படிங்க: கடும் ஏற்ற இறக்கம்: லேசான உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை
ஏற்றம்
வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து, 55,850 புள்ளிகளும், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 51 புள்ளிகள் அதிகரித்து, 16,681 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. காலையில் தொடங்கிய ஏற்றம் படிப்டியாக உயர்ந்தது. பிற்பகலுக்குப்பின், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வங்கி, ஐடி துறை பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் உற்சாகத்துடன் நடந்தது

வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 935 புள்ளிகள் உயர்ந்து, 56,486 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 254 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 16,884 புள்ளிகளில் நிலை கொண்டது.
லாபம்
சென்செக்ஸில் ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன
இதை படிக்க மறக்காதிங்க: பங்குச்சந்தையில் ஏற்றம்: காளையின் ஆதிக்கத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

துறைகள்
இந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல், டாக்டர் ரெட்டீஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், பவர்கிரிட், ஐஓசி, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ லைப், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பில் முடிந்தன
நிப்டியில் வங்கி, ஐடி, ஊடகத்துறை பங்குகள் 2சதவீதம்வரை லாபத்தை ஈட்டின. ஆட்டமொபைல், ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைபங்குகள் சரிவில்முடிந்தன
