Share market: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக முடிவுகள் வருவது இன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும்வகையில் அமைந்திருந்தது. காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலையிலும் ஏற்றத்துடனே முடிந்தது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக முடிவுகள் வருவது இன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும்வகையில் அமைந்திருந்தது. காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலையிலும் ஏற்றத்துடனே முடிந்தது.
தொடர்ந்து 3-வது நாளாக பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

ரூ.29 லட்சம் கோடி இழப்பு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பங்குச்சந்தையில் பெரும் ஊசலாட்டம் நிலவியது. இதில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்து,பங்குச்சந்தையில் தினசரி பங்குகள் வீழ்ந்து முதலீட்டாளர்களுக்கு கடந்த மாதத்தில் மட்டும் ரூ.29 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது.
கச்சா எண்ணெய் விலை குறைவு
ஆனால், உக்ரைன் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம், கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்திருப்து, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது ஆகியவை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின.
முதலீடு செய்ய அச்சப்பட்ட முதலீட்டர்கள் இன்று ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி கைமாற்றினர். மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 1200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது, நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 817 புள்ளிகள் உயர்ந்து, 55,464 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்கு்சசந்தையில் நிப்டி, 218 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 16,563 புள்ளிகளில் நிலை பெற்றது.
உலோகத்துறை சரிவு
மும்பைப் பங்குசந்தையில் பெரும்பாலான துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன, ஆனால், உலோகத்துறையின் பங்குகள் மட்டும் சரிவில் முடிந்தன
ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்துஸ்தான் யுனிலீவர்,பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, பஜாஜ் பைனாஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. தேசியப்பங்கு்சசந்தையான நிப்டியில், வங்கித்துறை, ஆட்டோமொபைல், நிதிச்சேவை, எப்எம்சிஜி, ஐடி, ஊடகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல்எஸ்டேட் ஆகிய துறைகளின் ப ங்குகள் லாபமடைந்தன.

இதில் உலோகத்துறை பங்குகள் சரிந்தன.மும்பைச் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 27 நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன, 3 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன
