Share market today:மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் கடந்த 5 நாட்களாக ஏற்றம் கண்ட நிலையில் இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து. சந்தை முதலீட்டாளர்கள் மனதில் மீண்டும் கரடி புகுந்துள்ளது.

மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் கடந்த 5 நாட்களாக ஏற்றம் கண்ட நிலையில் இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து. சந்தை முதலீட்டாளர்கள் மனதில் மீண்டும் கரடி புகுந்துள்ளது.

காரணம் என்ன

இதைப் படிங்க: பேடிஎம் வங்கியை ரிசர்வ் வங்கி தண்டித்ததற்கு இதுதான் காரணமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துவருகிறது, உக்ரைன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தையும் நடக்கப்போகிறது இரு முக்கிய காரணிகளும் கடந்த காலங்களில் பங்குச்சந்தையை உலுக்கிய நிலையில் இவை பாதிக்கவி்லலை. ஆனால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்ததால், பிற்பகலுக்குப்பின் சந்தையில் ஊசலாட்டம் காணப்பட்டு சரிவை நோக்கி நகர்ந்தன.

புதிய தடை

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது பிரிட்டன் புதிதாக பொருளாதாரத் தடைவிதித்தன. ரஷ்யாவிலிருந்துஇறக்குதியாகும் 100 வகையான பொருட்களுக்குத் தடைவிதித்தது போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின.

இதுதவிர அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற அச்சம் உலக சந்தையிலும் எதிரொலித்ததால் அமெரிக்காவின் நிக்கி, ஹாங்காங், பிரிட்டன் சந்தைகள் சரிவில் முடிந்தன. இவை அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு மனதை ஆட்டம் காணச் செய்தது.

இதை படிக்க மறக்காதிங்க : Share market today: பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

காலையில் உயர்வு

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையில் 200 புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்பட்டது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர்.

மாலையில் சரிவு

ஆனால் பிற்பகலுக்குப்பின் பங்குசந்தை தலைகீழாக மாறி சரிவை நோக்கி நகர்ந்தது. வர்த்தகம் முடிவில், மும்பை வங்குச்சந்தையில் சென்செக்ஸ் 709 புள்ளிகள் சரிந்து, 55,776 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 225 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 16,646 புள்ளிகளில் சரிவுடன் முடிந்தது.

உலோகம், எண்ணெய் எரிவாயு 

உலோகத்துறை பங்குகளான ஹின்டால்கோ, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் ஆகியவை மோசமான சரிவைச் சந்தித்தன. எண்ணெய் நிறுவனப் பங்குகளான ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, டெக் மகிந்திரா, கோடக் வங்கி, இன்போசிஸ், பிபிசிஎல், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ்ஆகிய பங்குகளும் வீழ்ந்தன

இதைப்படிங்க : Share market today: காளை ராஜ்ஜியம்; தொடர்ந்து 5-வதாக நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை

டாடா நுகர்வோர் பொருட்கள், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஸ்ரீ சிமெண்ட், சிப்லா, மாருதி சுஸூகி, யுபிஎல், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்வில் முடிந்தன

மும்பை பங்குச்சந்தையில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி ஆகிய துறை பங்குகள்சரிவில் முடிந்தன. ஆட்டமொபைல், எப்எம்சிஜி பொருட்கல் உயர்வில் முடிந்தன