paytm share:டிஜிட்டல் பரிமாற்ற பேமெண்ட் வங்கிகளில் முன்னணியாக இருந்துவரும் பேடிஎம் பேமெண்ட் வங்கி, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ்வங்கி ஏன் தடை விதித்தது, தடை விதிக்க காரணம் என்ன என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் பரிமாற்ற பேமெண்ட் வங்கிகளில் முன்னணியாக இருந்துவரும் பேடிஎம் பேமெண்ட் வங்கி, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ்வங்கி ஏன் தடை விதித்தது, தடை விதிக்க காரணம் என்ன என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி தடை

இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி குறித்து கடந்த சனிக்கிழமை ரிசர்வ் வங்கி ஓர் உத்தரவை வெளியிட்டது. அதில், “ பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது. அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவை தணிக்கை செய்ய வேண்டும். இது உடனடியாகஅமலுக்குவருகிறது” எனத் தெரிவித்தது.
இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்தன. 13 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பங்கு ரூ.700ஆகக் குறைந்தது.
தடைஏன
இதற்கிடையே பேடிஎம் பேமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு திடீரென புதியவாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விவரம் குறித்து அறிந்தவர், பெயரை வெளியிட விரும்பாதவர் கூறுகையில் “ பேடிஎம் பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வர்கள் குறித்து ஆண்டு தணிக்கையை ரிசர்வ் வங்கி நடத்தியது. அப்போது, பேடிஎம் வங்கி, தனது சர்வரிலிருந்து பல்வேறு தகவல்களை சீனாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தது தெரியவந்துள்ளது.

ஐடி ஆடிட்டிங்
பேடிஎம் நிறுவனத்தில் மறைமுகமாக சீன நிறுவனங்கள் பங்கு முதலீடு செய்துள்ளன. பேடிஎம் வங்கியி்ன் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவும், சீனாவின் அலிபாபா குழுமமும் கூட்டாக இதைத் தொடங்கின. இது பங்குச்சந்தை பதிவேட்டில்இருக்கிறது. அதனால்தான் ரிசர்வ் வங்கி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை அமர்த்தி ஐடி ஆடிட்டிங் செய்ய உத்தரவிட்டள்ளது. இதனால்தான் வெளியிலிருந்து ஒரு ஆடிட்டரை வரவழைத்து தணிக்கை செய்வதாக பேடிஎம் தெரிவித்துள்ளது. இந்த செயலால் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு வராது ” எனத் தெரிவித்தார்
இது தொடர்பான செய்தியை உறுதி செய்ய ரிசரவ் வங்கிக்கும், பேடிஎம் நிறுவனத்துக்கும் செய்தி நிறுவனம் சார்பில் மின்அஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை.

6 கோடி பேர்
இதேபோல அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, மாஸ்டர் கார்டு ஆகியவையும் வாடிக்கையாளர்கள் விவரங்களை பகிர்ந்தமைக்காக ரிசர்வ் வங்கியால் தண்டிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேடிஎம் வங்கி ஐபிஓ வெளியிட்டு ரூ.18,300 கோடி நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் தற்போது 6 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர் 30 கோடிபேர் வாலட் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
