fed interest rate: 4 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியது
fed interest rate: உலக நாடுகளின் பங்குச்சந்தை மிகவும் எதிர்பார்த்திருந்த அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின், கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவதாக நேற்று அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் பங்குச்சந்தை மிகவும் எதிர்பார்த்திருந்த அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின், கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவதாக நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி 0.25 புள்ளிகள் வட்டி வீதத்தை உயர்தியதால், இனிமேல் கடனுக்கான வட்டி 0.50 % வசூலிக்கப்படும்.
பணவீக்கம் அதிகரிப்பு
அமெரி்க்காவில் கொரோனாவுக்குப்பின் பணவீக்கம் கடுமையாக அதிகரித்தது. கடந்த 1970களில் இருந்த பணவீக்கத்தைப் போல் 7.9% இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அனைத்துப் பொருட்கள், சேவைக்கும் அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர், விலைவாசியும் கடுமையாக அதிகரித்தது. அதற்கு பணவீக்கத்தை தூண்டுவதுபோல் வங்கியில் கடனுக்கான வட்டியும் மிகக்குறைவா 0.25% மட்டுமே வசூலிக்ககப்பட்டுவந்தது.
வட்டி அதிகரிப்பு
அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச்16ம்தேதி(நேற்று) கூடும் பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியானது. இதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில், பெடரல் ஓபன் மார்க்கெட் கமி்ட்டி கடனுக்கான வட்டியை 0.25 புள்ளிகள் உயர்த்த பரிந்துரைத்தது. இதன்படி அமெரிக்காவில் கடனுக்கான வட்டி 0.25 %லிருந்து 0.50% ஆகஉயர்ந்துள்ளது.
இனிமேலும் வட்டி உயரும்
பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதால், நுகர்வோர்கள், நிறுவனங்கள் வங்கியில் கடன் பெறும் கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கும். இந்த நிதியாண்டுவரை பணவீக்கம் 4.2%வரை உயரக்கூடும் என பெட் வங்கி தெரிவித்துள்ளது.ஆனால், பெடரல் வங்கியின் பணவீக்க கட்டுப்பாட்டு அளவு 2% மட்டும்தான். ஆதலால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அடுத்துவரும் 6 நிதிக்கொள்கைக் கூட்டங்களிலும் வட்டிவீதம் உயரக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் பணவீக்கத்தால் பொருளாதார வளர்ச்சி 4% என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது 2.8% மட்டுமே கடந்த டிசம்பர் வரை வளர்ந்தது. இதனால், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் வட்டிவீதம் வரும் மாதங்களில் மேலும் உயரக்கூடும்.
7 முறை உயரலாம்
பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் நேற்று அளித்த பேட்டியில் “ பெருந்தொற்று காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் வட்டி வீதத்தை குறைத்திருந்தோம். ஆனால், பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது, பணவீக்கம் அதிகரித்ததால், வட்டிவீதத்தை உயர்த்தலாம் என கடந்த டிசம்பரில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 3 முறை மட்டும் வட்டிவீதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், பணவீக்கம் அதிகமாக இருப்பதால்,2022ம் ஆண்டுக்குள் 7 முறை வட்டி வீதம் உயர்த்தப்பட்டு 1.875% உயரக்கூடும், 2023ம் ஆண்டில் வட்டிவீதம் 2.80சதவீதம் வரை உயரலாம். கடந்த 2008ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் அதிகபட்ச வட்டிவீதமாக இருக்கும். இதனால் கடனுக்கான வட்டி, கிரெடிட் கார்டுக்கான வட்டி உள்ளிட்டவை உயரும்” எனத் தெரிவித்தார்
- Federal Open Market Committee (FOMC)
- Federal Reserve
- bank lending rates
- fed interest rate
- inflation
- repo rate
- united states
- fed rate hike
- fed bank share price
- fed meeting
- fed interest rate hike
- interest rate hike
- fed rate hike 2022
- fed rate hike news
- us fed rate hike
- fed rate hikes
- fed rate hike today
- fed rate hike impact
- பெட் வங்கி
- அமெரிக்க பெடரல் வங்கி
- வட்டி வீதம் உயர்வு
- பெட் வங்கி வட்டி வீதம்
- பெடரல் வங்கி வட்டி
- பணவீக்கம்