Asianet News TamilAsianet News Tamil

SBI Share price: உச்சம் தொட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கிப் பங்குகள்:வரலாற்று லாபம்! % வரை உயர்ந்தது

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செப்டம்பர் மாத முடிவில் 2வது காலாண்டில் வரலாற்று லாபம் அடைந்ததையடுத்து, பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்குகள் விலை உச்சம் தொட்டன.

SBI share price reaches record high; analysts predict stock price to increase to Rs 760 level.
Author
First Published Nov 7, 2022, 1:56 PM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செப்டம்பர் மாத முடிவில் 2வது காலாண்டில் வரலாற்று லாபம் அடைந்ததையடுத்து, பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்குகள் விலை உச்சம் தொட்டன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2வது காலாண்டில் ரூ,13,265 கோடி லாபம் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டைவிட 74 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டுஇதே 2வது காலாண்டில், ரூ.7,627 கோடிதான் லாபம் ஈட்டியிருந்தது.

SBI share price reaches record high; analysts predict stock price to increase to Rs 760 level.

தங்கம் விலை தொடர் உயர்வு! நடுத்தரக் குடும்பத்து மக்கள் கலக்கம்: இன்றைய நிலவரம் என்ன?

 அதிகமான கடன்கள் அளித்தது, அதிகமான வட்டி போன்றவை லாபத்துக்கு முக்கிய காரணம். இதனால் வங்கித்துறை பங்குகளில் எஸ்பிஐ வங்கிப் பங்கு அதிக லாபத்துடன் பங்குசந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து நகர்ந்தது.

இதனால் எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து, 622.70ஆக அதிகரித்தது. அக்டோபர் மாதத்திலிருந்து எஸ்பிஐ பங்கு மதிப்பு 17% அதிகரித்துள்ளது. இந்த உயர்வில் பாதிக்குமேல் இந்த ஆண்டில் கிடைத்த உயர்வாகும்.

SBI share price reaches record high; analysts predict stock price to increase to Rs 760 level.

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

இதே நிலையில் எஸ்பிஐ பங்கு விலை சென்றால், ரூ.660லிருந்து ரூ.700க்கு மேல் அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2020ம் ஆண்டிலிருந்து எஸ்பிஐ வங்கிப் பங்கு மதிப்பு 300% உயர்ந்துள்ளது. 

ஏற்றத்தில் பங்குச்சந்தை: 61,000 புள்ளிகள் கடந்தது சென்செக்ஸ்! நிப்டி ஜோர்! எஸ்பிஐ உச்சம்

எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டிவருவாய் மட்டும் கடந்த ஆண்டைவிட 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே 2வது காலாண்டில் வட்டி வருவாய் ரூ.31,184 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் ரூ.35,183 கோடியாக அதிகரித்துள்ளது. 

SBI share price reaches record high; analysts predict stock price to increase to Rs 760 level.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது எஸ்பிஐ பங்கு மதிப்பு ரூ.593.14 ஆக இருந்தது. ஆனால் 2வது காலாண்டு முடிவுகளில் எஸ்பிஐ வங்கியின் லாபம் வரலாறு காணதவகையில் உயர்ந்ததையடுத்து, காலை வர்த்தகம் தொடங்கியதும் எஸ்பிஐ வங்கி பங்கு மதிப்பு 3.4% உயர்ந்து, ரூ.614 அதிகரித்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றுவரும் எஸ்பிஐ பங்கு மதிப்பு 5 சதவீத வளர்ச்சியை இன்று எட்டியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios