வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
சர்வதேச அளவில் காரணிகள் சாதகமாக அமைந்திருப்பது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதையடுத்து, காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தவறு நடந்துவிட்டது! பணிநீக்கம் செய்யப்பட்ட பலரையும் மீண்டும் அழைக்கிறது ட்விட்டர்
சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் பொருளாதார நடவடிக்கை தொடங்கியிருப்பது, அமெரிக்காவில் அக்டோபர் மாத வேலைவாய்ப்பு நிலவரம் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைவு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆசிய பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் இருப்பதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

இதனால் பங்குச்சந்தை காலையில் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கத் தொடங்கியதால் வர்த்தகம் ஏற்றத்தை நோக்கி நகர்ந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து, 61,252 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 107 புள்ளிகள் ஏற்றத்துடன், 18,244 புள்ளிகளுடன் வர்த்தகத்தை உயர்வுடன் நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 25 பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன, டைட்டன்,டாக்டர்ரெட்டீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ்பின்சர்வ், இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் மட்டும் மதிப்பு சரிந்துள்ளன.
காளை முகம்!பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்

நிப்டியில் உலோகம் உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்துடன் நகர்கின்றன. அதிபட்சமாக வங்கித்துறை பங்குகள் ஒரு சதவீதம் லாபத்துடன் செல்கிறது. மருந்துத்துறை மட்டும் சரிவில் உள்ளது.
கோல் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஆதித்யா பிர்லா கேபிடல், என்டூரன்ஸ் டெக்னாலஜிஸ், உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இன்று தங்களின் 2வது காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2வது காலாண்டில் ரூ,13,265 கோடி லாபம் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டைவிட 74 சதவீதம் அதிகமாகும். அதிகமான கடன்கள் அளித்தது, அதிகமான வட்டி போன்றவை லாபத்துக்கு முக்கிய காரணம். இதனால் வங்கித்துறை பங்குகளில் எஸ்பிஐ வங்கிப் பங்கு அதிக லாபத்துடன் நகர்ந்து வருகிறது
