வாரத்தின் கடைசிநாளான இன்று, மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் இரு நாட்களுக்குப்பின் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.
வாரத்தின் கடைசிநாளான இன்று, மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் இரு நாட்களுக்குப்பின் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு, பணவீக்கம் குறித்த ஆர்பிஐ அறிக்கை, உலகளவில் பல்வேறு நாடுகளின் வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்துவதால் பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

மேதாந்தா மருத்துவமனையில் குளோபல் ஹெல்த் ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன, முழுவிவரம்
இதனால்தான் கடந்த இரு நாட்களாக முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால், இன்று காலை ஏற்றத்துடன் பங்குசந்தை வர்த்தகத்தை தொடங்கி, சரியத் தொடங்கியது, பின்னர் மீண்டும் உயர்ந்தது. இதுபோன்று ஊசலாட்டத்துடனே காணப்பட்டது.
ஆனால், இந்தியச் சந்தையில் தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள், பங்குகள் திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டமில்லை என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து, 60,950 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குசந்தையில் நிப்டி 64 புள்ளிகள் ஏற்றம் பெற்று, 18,117 புள்ளிகளில் நிலைபெற்றது.

ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஏன் பணவீக்கம் குறி்த்து விளக்க அறிக்கை அனுப்பியது? ஓர் அலசல்
தேசியப் பங்குசந்தை நிப்டியில், உலோகத்துறை பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு லாபம் ஈட்டின. அதைத் தொடர்ந்து பொதுத்துறைவங்கி, ஊடகத்துறை பங்குகள் ஒருசதவீதம் லாபம் ஈட்டின. தனியார்வங்கி, மருந்துத்துறை, எப்எம்சிஜி, வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் சரிவில் முடிந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 12 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன, 18 பங்குகள் மதிப்பு உயர்ந்தது. குறிப்பாக பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, லார்சன் அன்ட் டூப்ரோ, டைட்டன் , மகிந்திரா அன்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்ககுள் மதிப்பு உயர்ந்தது.
ஐடிசி, சன்பார்மா, மாருதி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, ஹெச்டிஎப்சி டிவின்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது.

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் பைஜூஸ் நிறுவனம் ஒப்பந்தம்: பிராண்ட் அம்பாசிடராக நியமனம்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் உயர்ந்தநிலையில் முடிந்தது. அந்நியச் செலாவணி பரிமாற்றச் சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.82.88 ஆகஇருந்தது. இன்று வர்த்தகம் முடிவில் ரூபாய் மதிப்பு 45 பைசா உயர்ந்து, ரூ.82.43 பைசாவில் உயர்வுடன் முடிந்தது.
