MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னை டூ ஹைதராபாத் இனி 8 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. சூப்பர் அப்டேட்!

சென்னை டூ ஹைதராபாத் இனி 8 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. சூப்பர் அப்டேட்!

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2 Min read
Author : Rayar A
Published : Feb 26 2026, 11:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வந்தே பாரத் ரயில்கள்
Image Credit : X

வந்தே பாரத் ரயில்கள்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி, வந்தே பாரத் என அதிவேக ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன. இதில் மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், பயண நேரம் குறைவதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னை டூ ஹைதராபாத் வந்தே பாரத் ஸ்லீப்பர்
Image Credit : Asianet News

சென்னை டூ ஹைதராபாத் வந்தே பாரத் ஸ்லீப்பர்

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

சென்னையில் இருந்து தொழில்நுட்ப நகரமான பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதே வேளையில் மற்றொரு தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்துக்கு வந்தே பாரத் ரயில்கள் நேரடியாக இல்லை.

தெற்கு ரயில்வே முடிவு

இந்த நிலையில், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மொத்தம் 720 கிமீ ஆகும். 

இது நமது சென்னை டூ திருநெல்வேலி தூரம் கொண்டது. சென்னையில் இருந்து ஹைதரபாத்துக்கு தற்போது இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் 14 மணி நேரத்தில் ஹைதராபாத் சென்றடைகிறது.

Related Articles

Related image1
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Related image2
சென்னை டூ டெல்லி இனி 24 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. பயணிகள் குஷி!
34
 வெறும் 8 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம்
Image Credit : X

வெறும் 8 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம்

ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வெறும் 8 முதல் 9 மணி நேரத்தில் ஹைதராபாத் சென்றடையும் வகையில் இயக்கப்படும். இதனால் இதன்மூலம் சுமார் 5 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும். 

இந்த ரயில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, நெல்லூர் வழித்தடத்தில் ஹைதராபாத் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், காசிபேட் சந்திப்பு, செகாந்திரபாத் சந்திப்பு ஆகிய முக்கிய இடங்களில் மட்டுமே நிறுத்தங்கள் வழங்கப்படும்.

44
அறிவிப்பு எப்போது வரும்?
Image Credit : X

அறிவிப்பு எப்போது வரும்?

வந்தே பாரத் ஸ்லீப்பர் என்பதால் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டே பயணம் செய்ய முடியும். சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கும், ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கும் கல்வி, மருத்துவம், வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக தினமும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

விமானத்தில் கட்டணம் அதிகம் என்பதால் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் அது மக்களுக்கு பேருதவியாக இருப்பது மட்டுமின்றி, ரயில்வேக்கும் வருமானம் ஈட்டித் தரும். ஆகவே சென்னை டூ ஹைதரபாத் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI Rules: திடீர்னு உங்க பேங்க் அக்கவுன்ட் முடங்குமா? RBI-ன் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Post Office TD: ரிஸ்க் இல்லாம கேரண்டி வருமானம்... தபால் நிலையத்தின் சூப்பர் திட்டம்!
Recommended image3
DA Hike: பண்டிகைக்கு முன் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்? 63% ஆகும் டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்?
Related Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image2
சென்னை டூ டெல்லி இனி 24 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. பயணிகள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved