MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னை டூ டெல்லி இனி 24 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. பயணிகள் குஷி!

சென்னை டூ டெல்லி இனி 24 மணி நேரம் தான்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெடி.. பயணிகள் குஷி!

வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், படுக்கை வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

2 Min read
Author : Rayar r
Published : Feb 13 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியன் ரயில்வே
Image Credit : ANI

இந்தியன் ரயில்வே

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயில்

இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

23
சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
Image Credit : Asianet News

சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

வந்தே பாரத் ரயில்களில் இதுவரை இருக்கைகள் மட்டுமே இருக்கும் நிலையில், படுக்கை வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஹவுரா - குவஹாத்தி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் இயக்கப்படுகிறது.

 மேலும் இந்த ரயில்கள் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு நேரடியாக வந்தே பாரத் ரயில் ஏதுமில்லை.

24 மணி நேரத்தில் டெல்லி செல்லலாம்

சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 32 மணி நேரம் செல்கிறது. மேலும் சென்னையில் இருந்து இயக்கப்படும் நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் டெல்லியை 28 மணி நேரம் 5 நிமிடத்தில் சென்றடைகிறது. 

சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 24 மணி நேரம் முதல் 26 மணி நேரத்தில் டெல்லி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
அவசரமா ரயிலில் போறீங்களா.. இனி டிக்கெட் கிடைக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில்களில் புதிய அம்சம்
Related image2
சீனாவே செம ஷாக்! உலகிலேயே மலிவு விலை 'ஹை-ஸ்பீடு' பயணம் - வந்தே பாரத் படைத்த புதிய சாதனை
33
6 மணி நேரம் மிச்சமாகும்; எந்தெந்த ரூட்கள்?
Image Credit : X

6 மணி நேரம் மிச்சமாகும்; எந்தெந்த ரூட்கள்?

இதன் மூலம் சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பயண நேரம் மிச்சமாகும். இந்த ரயிலில் படுக்கை வசதி மட்டுமின்றி உட்காரும் வசதியும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விஜயவாடா, நாக்பூர், போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு என முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும். இந்த ரயில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அவசரமா ரயிலில் போறீங்களா.. இனி டிக்கெட் கிடைக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில்களில் புதிய அம்சம்
Recommended image2
ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..டோல் பிளாசாவில் அழுக்கு டாய்லெட் படம் அனுப்பினால் போதும்!
Recommended image3
இனி எல்லோருக்கும் சொந்த வீடு.. வீட்டுக் கடனுக்கு ரூ.1.80 லட்சம் வரை மானியம்.. மத்திய அரசு திட்டம்!
Related Stories
Recommended image1
அவசரமா ரயிலில் போறீங்களா.. இனி டிக்கெட் கிடைக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில்களில் புதிய அம்சம்
Recommended image2
சீனாவே செம ஷாக்! உலகிலேயே மலிவு விலை 'ஹை-ஸ்பீடு' பயணம் - வந்தே பாரத் படைத்த புதிய சாதனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved