MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அவசரமா ரயிலில் போறீங்களா.. இனி டிக்கெட் கிடைக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில்களில் புதிய அம்சம்

அவசரமா ரயிலில் போறீங்களா.. இனி டிக்கெட் கிடைக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில்களில் புதிய அம்சம்

இந்தியன் ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவசர பயணங்களுக்கான புதிய டிக்கெட் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தொடர்பான விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 13 2026, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அவசர டிக்கெட் ஒதுக்கீடு
Image Credit : X

அவசர டிக்கெட் ஒதுக்கீடு

அவசர தேவைகளுக்காக திடீரென பயணம் செய்ய வேண்டிய சூழலில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது சாதாரண விஷயம். இதை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது. இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவசர சூழ்நிலைகளில் பயணிப்பவர்கள் (Emergency Quota) அறிமுகமாகிறது.

25
புதிய ரிசர்வேஷன் விதி
Image Credit : X

புதிய ரிசர்வேஷன் விதி

இதுவரை இந்த ரயில்களில் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான ஒதுக்கீடு மட்டுமே இருந்தது. தற்போது அவசர சூழ்நிலைகளில் பயணிக்க வேண்டியவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். அம்ரித் பாரத் ரயில்களில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்லீப்பர் கோச்கள் இருந்தால் அதிகபட்சம் 24 படுக்கைகள் எமெர்ஜென்சி கோட்டாவில் வழங்கப்படும்.

Related Articles

Related image1
வா வாத்தியாரின் மொத்த வசூலை.. 6 நாளில் எடுத்த வித் லவ்.. எத்தனை கோடி தெரியுமா?
Related image2
மலிவு விலையில் 8 நாள்.. சிவராத்திரி ஸ்பெஷல் டூர்.. டிக்கெட் விலை எவ்வளவு?
35
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
Image Credit : X

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் வகைப்படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1A வகுப்பில் வாரநாட்களில் 4, வார இறுதியில் 6 இருக்கைகள். 2A-வில் வாரநாட்களில் 20, வார இறுதியில் 30. 3A-வில் வாரநாட்களில் 24, வார இறுதியில் 42 இருக்கைகள் ஒதுக்கப்படும். இது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடாகும்.

45
அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட்
Image Credit : X

அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட்

அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (Advance Reservation Period) தொடங்கும் நாளிலிருந்தே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வரும். மண்டல ரயில்வே அதிகாரிகள் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

55
அவசர பயணிகளுக்கு நல்ல செய்தி
Image Credit : stockPhoto

அவசர பயணிகளுக்கு நல்ல செய்தி

அவசர மருத்துவம், குடும்ப அவசரம், அலுவல் பணிகள் போன்ற சூழ்நிலைகளில் இந்த புதிய ஒதுக்கீடு பயணிகளுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதன் மூலம் கடைசி நேர டிக்கெட் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
தொடர்வண்டி பயணச்சீட்டு
பயணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..டோல் பிளாசாவில் அழுக்கு டாய்லெட் படம் அனுப்பினால் போதும்!
Recommended image2
இனி எல்லோருக்கும் சொந்த வீடு.. வீட்டுக் கடனுக்கு ரூ.1.80 லட்சம் வரை மானியம்.. மத்திய அரசு திட்டம்!
Recommended image3
போடு!.. பாலிசிதாரர்களுக்கு நல்ல செய்தி.. காப்பீட்டு பிரீமியத்தில் 18% ஜிஎஸ்டி நீக்கம்
Related Stories
Recommended image1
வா வாத்தியாரின் மொத்த வசூலை.. 6 நாளில் எடுத்த வித் லவ்.. எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
மலிவு விலையில் 8 நாள்.. சிவராத்திரி ஸ்பெஷல் டூர்.. டிக்கெட் விலை எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved